செந்தில்பாலாஜியையே கொங்கு மண்டலத்தில் எதிர்த்து நின்ற தில் லேடி மீனா ஜெயக்குமார் வீட்டில் இறங்கிய ரெய்டு! பகீர் பின்னணி...

Update: 2023-11-04 07:10 GMT

செந்தில் பாலாஜிக்கே தண்ணி காட்டிய மீனா ஜெயக்குமார் சிக்கிய பின்னணி...

திமுகவின் சீனியர் மற்றும் முக்கிய அமைச்சரான எ.வ.வேலுவின் வீட்டில் தற்பொழுது ரெய்டு நடைபெற்று வருகிறது, முதலில் 40 இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது எனவும் இந்த ரெய்டில் 100 அதிகாரிகள் இடம் பெற்றுள்னனர் எனவும் தகவல்கள் வருகின்றன.

விரைவில் இந்த ரெய்டு நடத்தும் இடங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படலாம் எனவும் சில தகவல்கள் கசிகிறது. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த ரெய்டு நடக்கலாம் என அமைச்சர்களை எச்சரித்ததாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளது.

எ.வ.வேலுவுக்கு நெருக்கமான இடங்களில் எல்லாம் ரெய்டு நடக்கும் அதே நேரத்தில் கோவையில் மீனா ஜெயக்குமார் என்பவரின் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக இறங்கி உள்ளனர்.

மீனா ஜெயக்குமார் திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளராக இருப்பவர், இவர் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர் என்பதும் கூறப்படுகிறது, இதன் காரணமாகத்தான் எ.வ.வேலு வீட்டில் அதிகாரிகள் சோதனையில் இறங்கிய அதே சமயம் மீனா ஜெயக்குமார் வீட்டிலும் சோதனை இறங்கியுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சார்ந்த திமுக முன்னாள் கவுன்சிலர் எம்.எஸ்.சாமி இடத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர், எம்.எஸ்.சாமியை பொருத்தவரை மீனா ஜெயக்குமாரின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர். இது மட்டுமல்லாமல் மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிடும் பொழுது செந்தில் பாலாஜியையே பகைத்துக் கொண்டவர் இந்த மீனா ஜெயக்குமார், கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது கோவையின் மேயர் பதவிக்கு தீவிரமாக காய் நகர்த்தினார் மாவட்டம் மகளிர் தொண்டர் அணி செயலாளர் மீனா ஜெயக்குமார் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் துரைமுருகன் ஆகியோரிடம் இருந்து நெருக்கத்தில் அவருக்கு தான் மேயர் பதவி வழங்கப்படும் பேச்சாக இருந்தது.

ஆனால் மீனா ஜெயக்குமாருக்கு கவுன்சிலர் சீட் கூட ஒதுக்கவில்லை என தகவல்கள் கிடைத்துள்ள, இதற்கு காரணமும் அமைச்சர் செந்தில் பாலாஜி என கூறப்படுகிறது இதை கட்சி மேடையிலேயே மீனா ஜெயக்குமார் போட்டு உடைத்தார் எனவும் தெரிகிறது' என சவுக்கு சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் சீட்டு எதிர்பார்த்து கிடைக்காத கோபத்தில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகை கட்சி மேடையில் வைத்தே திட்டியவர் தான் இந்த மீனா ஜெயக்குமார், அந்த அளவிற்கு பவர்ஃபுல்லாக கோவை மண்டலத்தில் திமுகவில் தில் லேடியாக வலம் வந்தவர் இவர்.

இப்படி கோவை மண்டலத்தில் செந்தில் பாலாஜியை எதிர்த்து அரசியல் செய்தவர் தான் இந்த மீனா ஜெயக்குமார் எ.வ.வேலு மற்றும் துரைமுருகன் ஆகிய இருவருக்கும் நெருக்கமான நபர்தான் என்ற காரணத்தினால் இவரை குறி வைத்து ரெய்டு இறங்கியுள்ளது எனவும் இந்த ரெய்டு எப்பொழுது முடியும் என தெரியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமல்லாமல் மீனா ஜெயக்குமார் செய்து வரும் ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பது எ.வ.வேலுவின் பணம் தான் என்ன வேறு சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எ.வ.வேலுவின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதால் அவருடன் தொடர்பில் இருக்கக்கூடிய அனைவரும் தற்பொழுது கலக்கமடைந்துள்ளனர், திருவண்ணாமலை, சென்னை, கோவை என பல இடங்களில் நீடிக்கும் ரெய்டில் பல ஆவணங்கள் சிக்கு எனவும் பல தலைகளும் சிக்குவார்கள் எனவும் தெரிகிறது. என்ன நடக்கிறது என பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Similar News