முதல்வருக்கு இரவில் வந்த போன் கால்! எ.வ.வேலு ரெய்டில் சிக்கப்போகும் பெரிய மேட்டர்...
முதல்வருக்கு இரவில் வந்த போன் கால்... எ.வ.வேலு ரெய்டு பற்றி பரபர தகவல்..
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக திமுக அமைச்சர் மற்றும் எம்பிக்கள் ரெய்டில் சிக்கி வருகின்றனர், பிரதானமாக செந்தில் பாலாஜி ரெய்டில் சிக்கி அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரெய்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் 4 மாதமாக இருந்து வருகின்றார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி அவரது மகன் கௌதம சிகாமணி, அதனை தொடர்ந்து எம்,பி ஜெகத்ரட்சகன் என தொடர்ச்சியாக ரெய்டில் சிக்கி வரும் நிலையில் தற்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை இன்று அதிகாலை முதலில் ரெய்டில் இறக்கியுள்ளது.
சென்னை திருவண்ணாமலை என எ.வ.வேலுக்கு சொந்தமான 40 இடங்களில் ரெய்டு தற்பொழுது நடைபெற்று வருகிறது, அதிகாலை முதலே இந்த ரெய்டு துவங்கியது எனவும், நேற்று இரவே வருமானவரித்துறை அதிகாரிகள் 40 இடங்களுக்கும் சென்றுவிட்டனர் எனவும், சரியாக குறித்த நேரத்தில் ஒரே நேரத்தில் ரெய்டு ஆரம்பிக்கப்பட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமல்லாமல் இந்த ரெய்டு 40 இடங்களில் கிடைக்கும் ஆவணங்களை வைத்து இன்னும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படலாம் என வேறு சில முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே திமுக அமைச்சர்கள் ரெய்டில் சிக்கி வரும் நிலையில் தற்போது எ.வ.வேலு சிக்கி இருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது, அவருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, அலுவலகங்கள், வீடு மற்றும் அவர் வியாபாரம் நடத்தும் நிறுவனம் ஆகிய இடங்களில் வருமானவரித்துறையினர் தீவிரமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த திமுக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களின் மத்தியில் பேசினாராம், அப்பொழுது பேசும்பொழுது முக்கியமான எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார். அந்த எச்சரிக்கையில் 'லோக்சபா தேர்தல் நெருங்குகிறது கவனமாக இருங்கள், கண்டிப்பாக ரெய்டு விடுவார்கள் ஜாக்கிரதியாக இருங்கள் என சில அமைச்சர்களை குறிப்பிட்டு பேசியிருக்கிறாராம்.