நான் ஏன் வாழனும்? சிறையில் புலம்பி தவிக்கும் கரூர் 'பத்து தல' - சவுக்கு பற்றவைத்த நெருப்பு...
சிறையில் உச்சகட்ட புலம்பலில் அமைச்சர் செந்தில் பாலாஜி!
கடந்த முறை அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொழுது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக கூறி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அமலாக்கத்துறை தாக்கல் செய்த 3000 பக்க குற்றப்பத்திரிக்கையின் காரணமாக இதுவரை 9 முறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் சிறைக்கு சென்று நான்கு மாதங்களை கடந்து விட்டதால் எப்போது வெளியில் வருவார் என அவரது தரப்பினரும், குடும்பத்தினரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இன்னும் அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்கிறார், அது மட்டுமல்லாமல் அவரது தம்பி அசோக்குமார் வேறு தலைமறைவாக இருக்கிறார் இந்த காரணங்களுக்காகவும் அவருக்கு ஜாமீன் கொடுப்பதற்கு நாங்கள் ஆட்சேபிக்கிறோம் என்று நீதிமன்றத்தில் வாதாடி அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியில் வராத அளவிற்கு பார்த்துக் கொள்கிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிறந்தநாள் வந்தது, இந்த பிறந்தநாளின் போது கடந்த ஆண்டு இருந்த கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த ஆண்டு செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளபோது கரூர் மற்றும் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் அவர் கொங்கு மண்டல பொறுப்பாளர் என்பதால் செந்தில் பாலாஜியின் பிறந்த நாள் பெருமளவில் களை கட்டியது.
ஒவ்வொரு ஊரிலும் திமுக சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது, சென்னையிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், திமுக அமைச்சர்கள் என முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறினார்கள்.
இப்படி சென்ற ஆண்டு கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடிவிட்டு இந்த ஆண்டு சிறையில் நான்கு சுவற்றுக்குள் செந்தில் பாலாஜி பிறந்த நாளை கொண்டாடும் நிலை ஏற்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.