பொட்டி பொட்டியாக கரன்ஸி! அள்ள அள்ள ஆவணங்கள்!! - மொத்தமாக சிக்கிய எ.வ.வேலு?
கட்டு கட்டாக சிக்கிய பணம்... மொத்தமாக சிக்குகிறாரா எ.வ.வேலு?
தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சரும் திமுகவின் முக்கிய சீனியர் அமைச்சருமான எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள எ.வ.வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் கணக்கில் வராத பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அவருக்கு சொந்தமான 40 இடங்களிலும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ள வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் வேறு செய்திகள் தெரிவிக்கின்றன. எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரிகளும், நிறுவனங்களும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன.
அதில் சில நிறுவனங்கள் வரியைப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு கிடைத்த புகாரின் காரணமாகத்தான் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. அந்த ரெய்டின் காரணமாக 80 இடங்களில் இறங்கிய அதிகாரிகள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும், எ.வ.வேலுவுக்கு நெருங்கியவரான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் சோதனைகள் ஈடுபட்டதில் பல்வேறு ஆவணங்கள் கார்ட் டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுவரை எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்றதில் 18 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்திக் கொண்டிருக்கும் பொழுது இரண்டு சூட்கேசுகள் நிறைய பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர், அந்த இரண்டு சூட்கேசுகள் நிறைய கைப்பற்றப்பட்ட பணத்தை சீல் வைத்து உடனடியாக திருவண்ணாமலை பிரான்ச் எஸ் பி ஐ வங்கிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.