நெட்டிசன்களிடம் வறுபடும் கமல்.... இதெல்லாம் இந்த வயசுல தேவையா?
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசனை முடித்துவிட்டு தற்பொழுது ஏதாவது சீசன் துவங்கி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பேசும் கருத்துக்கள், செய்யும் செயல்கள் இந்த ஆறு சீசனிலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் 6 சீசன்களையும் தாண்டி தற்பொழுது ஏழாவது சீசனில் போட்டி ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே சர்ச்சை அதிகமாக உள்ளது. முதலில் பவா செல்லதுரை நடவடிக்கைகள், அடுத்த பிறகு பிரதீப் ரெட் கார்டு கொடுத்து காரணம் கேட்காமலே அனுப்பப்பட்டது. இப்படி பல சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் நிக்சன் பெண்களிடம் நடந்து கொள்ளும் முறையும் பல விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் விதம் தற்பொழுது இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது, கமலஹாசன் குறித்த கமெண்ட்கள் இந்த வயதில் இதெல்லாம் தேவையா ஆண்டவரே? என இணையங்களில் வைரலாக உலா வருகிறது.
குறிப்பாக தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் பிக் பாஸை தொகுத்து வழங்கிய கமலஹாசன் உடுத்தி வந்த உரைதான் தற்பொழுது இணையங்களில் அதிகமாக பேசப்படுகிறது. கிட்டத்தட்ட சுடிதார் போன்று, சுடிதார் போன்றல்ல அது சுடிதார் தான்! பெண்கள் போட்டால் கண்டிப்பாக அது சுடிதார் மாதிரி தான் இருக்கும். அதுபோன்று உடை அணிந்து வந்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கின கமலஹாசன் செயலுக்கு இணையத்தில் தற்பொழுது வைரல் கமெண்ட்கள் பறந்து வருகின்றன.
அவசரத்தில் ஆண்டவர் ஸ்ருதி அக்கா டிரஸ் எடுத்து போட்டு வந்துட்டாரு! எனவும் எலிசபெத்து டெய்லர் மகளா! எனவும் பல கமெண்ட்கள் பறக்கின்றன. 70 வயதாகும் ஒரு நடிகர் அதுவும் மக்கள் நீதி மையம் என்ற ஒரு கட்சியை துவக்கி மக்கள் பிரச்சனையை பற்றி பேச ஆசைப்படும் நடிகர் இப்படி உடை விஷயத்தில் அதுவும் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பார்க்கும் படியான ஒரு சில செயல்களை கிண்டல் ஆகும் படி செய்து வருவது நன்றாகவா இருக்கிறது என பலரும் விமர்சிக்கின்றனர்.