வருகின்ற நவம்பர் 25ஆம் தேதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலத்தின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க நடைபெற்று வந்தது. அந்த வகையில் நேற்று பாஜக சார்பில் ராஜஸ்தானின் தலைநகரமான ஜெய்ப்பூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா கலந்துகொண்டு பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அந்த தேர்தல் அறிக்கையில், 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 450 மானியம் அளிக்கப்படும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்களுக்காக மகளிர் காவல் நிலையமும் ஈவ் டீசிங் பிரச்சனையை தடுக்க பிரிவு தொடங்கப்படும் என்றும் ஏலம் விடப்பட்ட விவசாயிகளின் நிலத்திற்கு இழப்பீடு பாலிசி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கென்று அவர்களின் பெயரிலே 2 லட்சம் ரூபாய் மதிப்பில் சேமிப்பு பத்திரம் வழங்கப்படும் என்ற பல வாக்குறுதிகளை அளித்துள்ளது பாஜக!
Source : The Hindu Tamilthisai