சீனியர்ன்னா ஓரமா போங்க! திமுகவில் துரைமுருகனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... பரபர பின்னணி...
மூத்த தலைவருக்கே இப்படி ஒரு விதியா... திமுக பொதுச்செயலாளருக்கு ஏற்பட்ட சோகம்!
திமுகவில் துரைமுருகன் தனது டீன் ஏஜ் வயதிலிருந்தே இயங்கி வருகிறார். கல்லூரி மாணவர் பருவத்தில் இருந்து திமுக மீது இவருக்கு ஈடுபாடு அதிகம், குறிப்பாக இவரை எம்ஜிஆர் அதிமுகவிற்கு வந்துவிடு என அழைத்த பொழுதும் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் எம்ஜிஆர், ஆனால் எனது தலைவர் கருணாநிதி தான் எனக்கூறி அதிமுகவிற்கு செல்லாமல் திமுகவிலேயே இருந்தவர் துரைமுருகன்.
ஒரு காலகட்டத்தில் இடி, மின்னல், மழை என்கின்ற திமுகவின் முழு வீச்சில் பேச்சு நிகழ்ச்சிகள் நடத்தியதில் துரைமுருகனுக்கு மிகப் முக்கிய பங்கு உண்டு, அவருடன் அரசியல் செய்த, அவருடன் திமுகவில் பயணித்த பலர் இன்று உயிருடன் இல்லை. இவ்வளவிற்கும் கருணாநிதிக்கு மனசு சோர்வாக இருந்தால் கூட துரைமுருகனை அழைத்து வரவழைத்து பேச சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பாராம் அந்த அளவிற்கு துரைமுருகன் அரசியலில் மூன்று தலைமுறைகளை பார்த்தவர். தற்பொழுது திமுகவின் பொது செயலாளர் ஆக இருந்து வருகிறார், தமிழக அமைச்சரவையில் நீர்வளத்துறையை தன் கைவசம் வைத்துள்ளார் துரைமுருகன்.
இப்படி பழம்பெரும் தலைவராக வலம் வரும் துரைமுருகன் தற்பொழுது திமுகவில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார் எனவும் அதாவது சொல்லப்போனால் முதல்வர் ஸ்டாலினே தற்பொழுது துரைமுருகனிடம் பேசுவதில்லை பேசி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது எனவும் இந்த தகவலை அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ளார்.
youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சவுக்கு சங்கர் கூறியதாவது, 'துரைமுருகன் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் வயதுக்கு வந்து விட்டார். நீர்வளத் துறையை அவர் கையில் வைத்திருக்கிறார், தற்பொழுது நடந்து வரும் மணல் ரெய்டில் பல விஷயங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் முதல்வர் ஸ்டாலின் பேசி அடுத்து என்ன செய்ய வேண்டும் என முடிவெடுக்க வேண்டும், இவர் யாரிடமும் பேச மாட்டேன் என்கிறார்.