திமுகவால் ஆர்.எஸ்.எஸ் பேரணியில் ஏற்பட்ட மாற்றம் - இடதுசாரிகளை தெறிக்கவிட்ட சங்பரிவார் பேரணி!
இதுதான் ஆர் எஸ் எஸ்.... தமிழகத்தில் கெத்து காட்டிய சங்பரிவார் அமைப்புகள்...
விஜயதசமியை முன்னிட்டு ஆர் எஸ் எஸ் தனது பேரணியை நடத்த வேண்டும் என கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டு காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தது. காவல்துறை அதற்கு முறையாக அனுமதி வழங்காத பட்சத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணியை நடத்தியே தீர வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் சென்றனர்.
இதன் காரணமாக நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது குறித்து திமுக அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் இடையேயான வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர் எஸ் எஸ் பேரணி நடந்தது.
விஜயதசமியை முன்னிட்டு இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி முடிந்த நிலையில் தமிழகத்தில் நவம்பர் 19ஆம் தேதி நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி பேரணி நடந்தது. சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், நெல்லை போன்ற பல இடங்களில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு பேரணி நடந்தது.
கோவையில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலம் துடியலூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி சேரன் காரணி விஸ்வநாதபுரம் வழியாக துடியலூர் பொருட்காட்சி மைதானத்தில் வந்து அடைந்தது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காக்கி கலரில் கால் சட்டையும் வெள்ளை கலரில் சட்டையும் அணிந்து ஆர்எஸ்எஸ் சேவகர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற்ற இடத்தில் ஆண்கள் மட்டுமல்லாது, பெண்கள், குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் வயது வித்தியாசம் பாராமல் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்எஸ்எஸ் பேரணி குறித்து எப்படி நடைபெற்றது? கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை எப்படி? எனக்கேட்ட பொழுது பல தகவல்கள் கிடைத்தன. அதாவது இதுவரை ஆர்எஸ்எஸ் பேரணி தமிழகத்தில் நடைபெற்றால் குறைந்த அளவிலே ஆட்கள் கலந்து கொள்வார்கள், ஆனால் இப்பொழுது அதிக அளவில் ஆட்கள் கலந்து கொள்வதை பார்க்க முடிகிறது என கூறினர்.