பட்டியலின தலைவருக்கு இருக்கை வழங்காதது தான் திராவிட மாடல் சமூக நீதியா.. இந்து முன்னணி குற்றச்சாட்டு..

Update: 2023-11-24 01:35 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் நகராட்சியின் நகர மன்ற துணைத் தலைவராக பட்டியலின பெண்ணான ராஜலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். பட்டியலின சமூகம் என்பதால் சாதிய ரீதியில் மரியாதை வழங்காமல் திண்டிவனம் நகராட்சி தலைவர் செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். குறிப்பாக அவர் எனக்கு நேர்ந்த அநீதிகளை அவர் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.

நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு கூட அழைத்து சென்று ஆய்வு செய்வதில்லை. தனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கூட வழங்கவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். திமுக மேடையில் பேசுவது ஒன்று. செயல்பாட்டில் வேறொன்று என்பதை இந்த சம்பவம் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது” என்று பாஜக மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அவர்கள் கூட விமர்சித்துள்ளார்.


இந்நிலையில் தற்பொழுது இந்து முன்னணி அமைப்பினரும் இதற்கு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார்கள் குறிப்பாக அவர்கள் கூறும் பொழுது, "பட்டியலின சமூகம்‌ என்பதால் நகராட்சி தலைவர் இருக்கைக்கு அருகே இருக்கை வசதி வழங்காமல் ஜாதீய தீண்டாமை கடைபிடிக்க படுகிறது என்று விசிக-வை சேர்ந்த திண்டிவனம் நகராட்சி துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் தெரிவித்துள்ளார். தங்கள் முன்னால் விசிக தலைவர் திருமாவளவனையே பிளாஸ்டிக் சேரில் உட்கார வைத்தவர்கள் திமுகவினர். மேடைக்கு மேடை சமூக நீதி சமத்துவம் பேசுவது, ஆனால் உண்மையில் திராவிட மாடலின் சமூக நீதி இந்த லட்சணத்தில் தான் தமிழகம் முழுவதும் உள்ளது" என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News