"கைக்கூலிகளின் நிறுவனமாக ஆவின் செயல்படுகிறது" அண்ணாமலை பகிரங்க குற்றாசாட்டு!!

Update: 2023-11-26 14:09 GMT

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரையில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் நடைபெற்று வரும் வாதங்கள் குறித்த கேள்விக்கு அண்ணாமலை, கோழைகள் மட்டுமே திமுக கட்சியில் உள்ளனர். பிரதமர் மோடி குறித்த பதிவை பதிவிட்ட பிறகு எதிர்ப்பு வந்தவுடன் அழித்துவிட்டு ஓடியவர் மனோதங்கராஜ்! இன்று என்னை வடநாட்டு கூலிக்காரன் என கூறி பதிவிட்டு மறுபடியும் அந்த டுவிட்டை அழித்துவிட்டு சொல்லாத மாதிரி ஒரு பொய்யை கூறுகிறார். நீங்களே கூறுங்கள் இவர்கள் அனைவரும் மக்களுக்கு சேவையாற்றும் எந்த ஒரு அடிப்படை பதவியிலும் பணியாற்ற தகுதியற்றவர்கள். 


திமுகவின் கட்டமைப்பை கடந்த 70 ஆண்டுகளாக அவதூறு, பொய், என்ன வேண்டுமென்றால் பேசிவிட்டு ஓடிவிடலாம் ஒரு சாதாரண மனிதன் அவர்களை எதிர்க்க முடியாது தலை குனிந்து நிற்பார் நம்ம பாட்டுக்கு அவதூறுகளை அள்ளி வீசலாம் என்று நினைக்கிறார்கள்! 

ஆவினை பொருத்தவரை தமிழகத்தில் அதலபாதாளத்தில் உள்ளது. கிட்டத்தட்ட "பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை ஒரு ஆவின் பால் பாக்கெட்டில் கொள்ளையடிக்கிறார்கள்". அமுல் நிறுவனம் என்பது கூட்டுறவு நிறுவனம் அதே நேரத்தில் ஆவின் நிறுவனம் என்பது கைக்கூலிகளின் நிறுவனம். அதனால் மனோ தங்கராஜ் போன்றவர்கள் அரசியலில் இருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு!! என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜை நோக்கி தனது கேள்விக்கணைகளை தொடுத்தார். 

Source : Asianet news 

Similar News