திமுக எம்.பிக்களுக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விழுந்த இடி...! மொத்தமும் போச்சு...!
திமுக எம்பிக்களுக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விழுந்த இடி....
கடந்த சில மாதங்களாக திமுக கூட்டணி எம்பிக்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் செல்லும் பொழுது மக்களால் கேள்வி கேட்கப்பட்டு 'எங்கள் தொகுதிக்கு என்ன செய்தீர்கள்' என கேட்கப்பட்டு விரட்டப்படும் சூழல் இருந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் அவரது தொகுதி திருச்சிக்கு செல்லும் பொழுது அங்கு மக்கள் அவரை நிறுத்தி, இவ்வளவு நாள் வரவில்லை எங்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது? என கேள்விகளை முன்வைத்தனர்.
அதனை தொடர்ந்து அடுத்த சம்பவமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவன் சிதம்பரம் தொகுதிக்கு செல்லும் பொழுது பத்திரிகையாளர்களால் அங்கு கேள்வி கேட்ட சம்பவம் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திருமாவளவனிடம் 'உங்கள் எம்.பி தொகுதியான சிதம்பரத்தில் எங்கே உள்ளது உங்கள் அலுவலகம்? உங்களை பார்ப்பதற்கு உங்களுக்கு வாக்களித்த மக்கள் சிதம்பரத்திலிருந்து சென்னைக்கு வர வேண்டுமா? என்ன செய்தீர்கள் இந்த தொகுதிக்கு?' என கேள்வி எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இருமுறை தொகுதி மக்களால் விரட்டப்பட்டார், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஓட்டு கேட்கும் பொழுது உங்களை பார்த்தது அதனை தொடர்ந்து ஆளையே காணுமே? என மக்கள் கேட்கையில் அங்கு மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் காரில் ஏறி ஓடினார்.
அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட என்ன செய்தீர்கள் இந்த தொகுதிக்கு? என கேள்வியை பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எம்.பி ஜோதிமணியிடம் முன்வைக்கும் போது முழுதாக பேசாமல் காரில் ஏறி எஸ்கேப்பானர்.