தி.மு.க தான் காரணமா? வாக்குமூலம் தத்த தமிழச்சி தங்கபாண்டியன்.. நாராயணன் திருப்பதி கேள்வி..
அண்மையில் நடந்த ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய கலந்துரையாடலில் திமுக எம்பி ஆக இருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார். இதில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இறுதியில் அவர், ஒரு கேள்விக்கு தான் அளித்த சர்ச்சையான பதில்கள் மூலம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அதிக பேச்சு பொருளுக்கு உள்ளாகி இருக்கிறார். இதுகுறித்து பாஜக மாநில துணைத்தலைவராக இருக்கும் நாராயணன் திருப்பதி அவர்களும் தன்னுடைய காட்டமான கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.
குறிப்பாக முள்ளிவாய்க்காலுக்காக பிரபாகரனிடம் வருத்தம் தெரிவிப்பேன் என்று தமிழச்சி தங்கபாண்டியன் கூறுவதன் மூலம், அதற்கு திமுக தான் காரணம் என்பதை அவர் ஒப்புக் கொண்டு விட்டார் என்றுதானே அர்த்தம்" என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார். அதாவது திமுக எம்பி இடம் நீங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமை ஒருவருடன் உணவு சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், அது யாராக இருக்கும் ? அதற்கு அவர் மேதகு தேசிய தலைவர் பிரபாகரன் என்று பதிலளித்தார். பிறகு பத்திரிக்கையாளர் அவரிடம் நீங்கள் என்ன கேட்பீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு "முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு அவரிடம் மன்னிப்புக் கோருவேன்" என்று பதிலளித்திருப்பவர் தி.மு.க வின் பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள். இவர் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?
அந்த நிகழ்வுக்கு காரணம் தி மு க தான் என்ற ஒப்புதல் வாக்குமூலமே இது என்பதை உணர்த்துகிறது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ? இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை சேர்ந்தவரை, முன்னாள் பிரதமரை கொன்ற ஒரு இயக்கத்தை வழி நடத்திய ஒருவரை, தேசிய தலைவர் என்று சொல்வது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சொல்வது தி மு கவின் ஆணவம். இப்போது கூட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுக்கு ரோஷம் வரவில்லையென்றால், அது வெட்கக்கேடே. என்று தன்னுடைய காரசாரமான கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்.
Input & Image courtesy: News