தூக்கி வீசப்பட்ட மருத்துவ அறிக்கைகள்... செந்தில்பாலாஜிக்கு அடுத்து என்ன திஹார் ஜெயிலா?

Update: 2023-11-28 14:52 GMT

செந்தில் பாலாஜிக்கு அடுத்து என்ன திகாரா?

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் 12ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது 5 மாதங்களை கடந்து புழல் சிறையில் இருந்து வருகிறார்.

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் அவருக்கு கிட்டத்தட்ட எட்டு முறைக்கும் மேல் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது, இது மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜிக்கு இனி ஜாமீன் வாங்க வேண்டும் என்றால் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு தான் சட்ட ரீதியில் அவருக்கு ஜாமீன் வாங்க முடியுமென செந்தில் பாலாஜியின் தரப்பு செந்தில் பாலாஜியின் உடல் நிலையை மையப்படுத்தியே அவருக்கு ஜாமீன் கோரி வந்தது.

செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கற்கள் இருக்கிறது, அவருக்கு மூளையில் கட்டி, முதுகு தண்டுவடத்தில் சிறு வீக்கம் என்பது போன்ற காரணங்களை கூறி ஜாமீன் வழங்கி செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருமுறை மனு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் ஜூன் 16ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20ஆம் தேதிகளில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை அடுத்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார், அதில் உடல் நலக்குறைவால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும். அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையாத சூழலில் மீண்டும் உடல் நல குறைவால் செந்தில்பாலாஜி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் இந்த ஜாமின் மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு 'செந்தில் பாலாஜி உடலில் இருக்கும் பிரச்சனைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம், அவரின் மருத்துவ காரணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. செந்தில் பாலாஜியின் சமீபத்திய மருத்துவர் ஆய்வு செய்த போதும் உயிருக்கு ஆபத்திருப்பதாக குறிப்பிடப்படவில்லை, நானும் google செய்து பார்த்தேன். இதை குணப்படுத்த முடியும் என்றுதான் கூறப்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமின் மனைவி பரிசீலனைக்க முடியும்' என தெரிவித்துள்ளார்.

இப்படி மருத்துவ காரணங்களை வைத்து ஜாமீன் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடையாது என நீதிபதி கூறிய விவகாரம் செந்தில் பாலாஜி தரப்பை அதிர்ச்சடைய வைத்துள்ளது. ஏற்கனவே வரும் நவம்பர் 28ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் இனி அவருக்கு ஜாமீன் கிடைப்பதே சிரமம் என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று அந்த விமர்சனங்களைப் போலவே செந்தில் பாலாஜி தரப்பிற்கு ஜாமீன் இல்லை என்று நீதிபதி கைவிரித்துவிட்டார். அதுவும் குறிப்பாக செந்தில்பாலாஜி உடல் நிலையை காரணம் காட்டி மட்டுமே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் பெற முடியும் என சட்ட வல்லுநர்கள் கூறிவந்த நிலையில் அவரது உடல் நிலையை காரணம் காட்டி அவருக்கு ஜாமீன் கொடுக்க இயலாது மாறாக தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலனைக்க முடியும் என நீதிபதி கூறியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இனிமே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது மிகவும் சிரமம் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இப்படி தொடர்ச்சியாக அமலாக்கத்துறை விசாரணை மற்றும் வழக்குக்கு தடை ஏற்படுத்தும் வகையில் நிறைய இடர்பாடுகள் இருப்பதால் செந்தில் பாலாஜியை அடுத்ததாக திஹாருக்கு கொண்டு செய்து விசாரிக்க வாய்ப்புகள் இருப்பதாக சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இப்படி விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக அமலாக்கத்துறை தரப்பில் இருந்து திகார் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என எந்த அறிவிப்பும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எனவும் அமலாக்கத்துறை தரப்பு என்ன கூறும் எனவும் ஆவலுடன் அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Similar News