தாத்தா காலத்து திமுகவை தெறிக்கவிட்ட திருவல்லிக்கேணி காவிகள் - சம்பவம் வேற லெவல்....

Update: 2023-11-28 14:55 GMT

'அதே இடத்துல ஆரம்பிங்க... நான் பாத்துக்குறேன்' என்ற அண்ணாமலை... திருவல்லிக்கேணியில் காவிகள் செய்த சம்பவம்...

சென்னை திருவல்லிக்கேணியில் வாக்காளர் சரிபார்ப்பு முகாம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக சார்பில் நடைபெற்றது. வாக்காளர் சரிபார்ப்பு, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பதற்கான அட்டவணைகள் உடன் வாக்காளர்களுக்கு உதவுவதற்காக பாஜக நிர்வாகிகள் திருவல்லிக்கேணியில் சாலை ஓரம் ஒரு முகாம் அமைத்து பாஜக கொடியை வைத்துக்கொண்டு பொது சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது அங்கு வந்த சில திமுகவினர் பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகமாகி திமுகவினருக்கும், பாஜகவினருக்கும் கைகலப்பாக மாறி உள்ளது.

மேலும் அங்கிருந்த திமுகவினர் பாஜகவினரை அடித்துள்ளனர், அடித்தது மட்டும் அல்லாமல் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியும், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியும், பாஜக கொடியை கசக்கி எறிந்தும் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


உடனே இந்த விவகாரம் குறித்து பாஜக தலைமை நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, குறிப்பாக கமலாலயத்தின் மாநில நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தனது எக்ஸ் பதிவில் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது, இது குறித்து பாஜக மாநில செயலாளர் வினோஜ் பதிவில் 'இதுதான் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு உண்மையான நிலவரம், முழுக்க முழுக்க அறிவாலய குண்டர்கள் வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்ட பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதுதான் சட்டம் ஒழுங்கை நீங்கள் வைத்திருக்கும் லட்சணமா? என தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் இந்த தகவல் உடனடியாக அண்ணாமலைக்கு கொண்டு செல்லப்பட்டது, அதே இடத்தில் மீண்டும் பணியை துவங்க வேண்டும் என்ன பிரச்சனை வந்தாலும் சரி ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அங்கு களத்தில் இருந்த நிர்வாகிகளுக்கு கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும் பாஜக துணை தலைவர் கரூ.நாகராஜன் உடனடியாக அங்கு நேரில் சென்று பார்வையிட்டார், கரு.நாகராஜனுடன் பாஜக நிர்வாகிகள் சென்று அங்கு நேரில் பார்வையிட்டு என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் நீங்கள் நடத்துங்கள் நாம் மக்களுக்கு சேவை செய்வதற்காக இங்கு இருக்கிறோம் இதனை தட்டிக் கேட்க அவர்கள் யார்? என அந்த கூறிவிட்டு வந்த காரணத்தினால் மீண்டும் அதே இடத்தில் நிர்வாகிகள் பாஜக பூத் பணியை துவங்கி உள்ளனர்.

மேலும் இது குறித்து சில பாஜகவினரிடம் பேசிய பொழுது 'முன்பு போல் நாங்கள் களப்பணி செய்தால் இறங்கி அடிப்பார்கள் வாங்கிக் கொண்டு ஓடி விடுவோம் என நினைத்தார்கள் போலிருக்கு. இப்பொழுது இருக்கும் திமுக தாத்தா காலத்து திமுகவாக இருக்கலாம் ஆனால் நாங்கள் தாத்தா காலத்து பாஜக கிடையாது, அவர்களை நிச்சயம் ஓட விடுவோம்! அவர்கள் இறங்கி அராஜகம் செய்தால் எதிர்த்து கேட்க எங்களால் முடியாதா, நாங்களும் செய்வோம்' என கூறியுள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News