உதயநிதி பிறந்தநாள் விழா.. இவ்வளவு போலீஸ் அதிகாரிகளா.. அண்ணாமலை கண்டனம்..

Update: 2023-11-29 01:24 GMT

கோபாலபுரத்தில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லம், சுற்றுவட்டாரப் பகுதி, அவரது வீட்டுக்குச் செல்லும் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் எக்கச்சக்கமான போலீஸ்காரர்களை திமுக அரசு நிறுத்தி வைத்து இருக்கிறது. இதனால் அந்த ஒரு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பாக ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் பாதுகாப்பு தேவை என்றால் குறைந்தபட்சம் அந்த நபர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் தான் போலீஸ்காரர்கள் அவர்களுக்கு இருப்பார்கள். ஆனால் இவருடைய பிறந்தநாளில் அளவிற்கு அதிகமாக பாதுகாப்பு படையினரை பயன்படுத்தி இருக்கிறார்கள்.


2 துணை கமிஷனர்கள், 10 உதவி கமிஷனர்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 90 சப்-இன்ஸ்பெக்டர்கள், 300 போலீஸ் அதிகாரிகள் மற்றும் கூடுதலாக 380 ஒதுக்கப்பட்ட போலீஸ்காரர்களும் அடங்குவர். குறிப்பாக காவல்துறையினர் மற்ற விஷயங்களில் தங்களுடைய கவனத்தை செலுத்தாமல் தங்களுடைய பாதுகாப்பிற்காக ஒரு அரசு அமைச்சர் பதவியில் இருக்கும் அவர்களை இப்படி நடந்து கொள்வது நியாயமா என்று கேள்வியும் தற்போது எழுந்து இருக்கிறது.

குறிப்பாக மாநிலம் அதிகரித்து வரும் சட்டம் மற்றும் ஒழுங்கு நெருக்கடியில் சிக்கியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும் திமுக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினைப் பாதுகாப்பதில் எவ்வளவு கணிசமான வளங்கள் முதலீடு செய்யப்படுகின்றன என்பதை விரிவான பாதுகாப்பு விவரம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

குறிப்பாக பிறந்தநாள் விழாவிற்கு ஏன் இவ்வளவு போலிஸ் பாதுகாப்பு பழகினரை அழைக்க வேண்டும்? இது அவசியமா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் கேள்வி எழுப்பி இருக்கிறார். சாமானியர்கள் மாநிலத்தில் அநீதிக்கு விலை கொடுத்து வரும் நிலையில், குடும்பத்தை மட்டும் பாதுகாப்பதில் தங்கள் பொறுப்பு முடிந்துவிடாது என்பதை ஊழல் திமுக அரசும், தமிழக காவல்துறையும் உணர வேண்டும்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News