மிதக்கும் சென்னை.. அன்று அ.தி.மு.கவை விமர்சித்து உதயநிதி ட்விட்.. இன்று என்ன ஆனது?

Update: 2023-12-05 01:56 GMT

அதிமுக ஆட்சியில் சென்னை கனமழை குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் உதயநிதியின் பழைய ட்விட்டர் தற்போது வைரலாகி வருகிறது . இப்போது கனமழையால் சென்னையே மிதக்கும் நிலையில் அவரது டுவீட் வைரலாகியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், சென்னை வழியாக ஆந்திராவுக்கு செல்கிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.


Source: Old Post Screenshot 

அதுமட்டுமில்லாத வெள்ளப் பெருக்கில் சென்னையில் ஒரு இடத்தில் முதலை கூட மழை நீரில் தத்தளித்ததை நம்மால் பார்க்க முடிந்தது. அது பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் அதிகமாக பகிரப்பட்டது. கிட்டத்தட்ட சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்து வருகிறது. மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு செய்தும், தண்ணீர் வடிந்தபாடில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் இதுபோல கனமழையால் சென்னை மிதந்தபோது, உதயநிதி விமர்சித்திருந்தார்.


இது பற்றி அவர் கூறும் பொழுது, "வீடு, சாலை எங்கும் வெள்ளம். ஒரு நாள் மழைக்கே சென்னை மிதக்கிறது. உள்ளாட்சித் துறையை ஊழலாட்சித் துறை ஆக்கிவிட்ட வேலுமணியும், அவரது டெண்டர் பார்ட்னர் எடப்பாடியும் அவதூறு போஸ்டர் ஒட்டிய நேரத்தில் கொஞ்சமாவது வடிகால்களை தூர்வாரியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. 2015 வெள்ளத்திலிருந்து பாடம் கற்கவில்லை. மாறாக இன்னும் வீரியமாக ஊழல் செய்கின்றனர். வெள்ளத்தடுப்பு பணிக்கான நிதியை வேலுமணியின் ஏழு கம்பெனி பினாமிகள் - மாநகராட்சி ஊழல் பெருச்சாளிகள் விழுங்கியதே இந்த அவலத்துக்கு காரணம். மக்கள் மறக்க மாட்டார்கள்" இன்று விமர்சித்து இருந்தார். ஆனால் தற்பொழுது திமுக ஆட்சியில் கூட பல்வேறு ஏற்பாடுகள் செய்தும் மழை நீர் வடிகால் அமைத்தும் மழை வடிந்த பாடு இல்லை, வெள்ளம் போல் அங்கங்கே தேங்கி நிற்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News