சனாதன எதிர்ப்பு பேச்சு இனி தமிழகத்தில் செல்லாது.. இந்து முன்னணி நெத்தியடி பதில்..

Update: 2023-12-05 13:53 GMT

நடந்து முடிந்த நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் தற்போது மூன்று மாநிலங்களில் பாஜக தனது ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. சனாதனத்தை எதிர்த்த காங்கிரசிற்கு சரியான பாடம் புகட்டப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள்  கருத்துக்களை எழுப்பி இருக்கிறார்கள். அது மட்டும் கிடையாது சமூக வலைத்தளங்களில் திமுக அமைச்சரான உதயநிதியின் பேச்சால் எல்லாம் போச்சு, இடத்தைக் கோட்டை விட்ட காங்கிரஸ் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.



 இந்து முன்னணி அமைப்பினர் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் கருத்தை கூறும் பொழுது, "நேற்று நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளில் மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் சத்தீஸ்கர் , போன்ற மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்ததுள்ளது. காங்கிரசின் படுதோல்விக்கு காரணம் சனாதனத்தை எதிர்த்ததுதான் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார். மேலும் காங்கிரஸின் மூத்த தலைவராகிய ஆச்சரிய பிரமோத் கிருஷ்ணன் அவர்கள் சனாதன எதிர்ப்பு காங்கிரஸ் கட்சியை மூழ்கடித்து விட்டது என்று கூறியிருக்கிறார்.


இந்து மதத்தை அழிப்பேன் என்று கூறியதால் மூன்று மாநிலங்களில் இந்து ஓட்டு வாங்கி உருவாகி இந்துக்களின் ஒற்றுமையை பிரதிபலித்துள்ளது. இனி யாரும் இந்து மதத்தை சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூற மாட்டார்கள் . தமிழகத்திலும் இதே போல இந்து ஓட்டு வங்கி உருவானால், இந்துக்களுக்கு உணர்வு வந்தால், இந்து மதத்தை இழித்தும் பழித்தும் இனி ஒருவரும் பேச முயலாத சூழ்நிலை உருவாகும்" என்ற காரசாரமான தன்னுடைய பதிலை பதிவிட்டு இருக்கிறார்கள். 

Input & Image courtesy:News

Tags:    

Similar News