தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி தனி ஒருவரால் வந்ததா.. யார் அந்த ரேவந்த் ரெட்டி?

Update: 2023-12-12 00:52 GMT

தற்போது நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் களில் மூன்று மாநிலங்களில் பொதுவாக பாஜக தான் தற்போது ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. காரணம் பாஜக தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான முயற்சிகள் மற்றும் மக்களுக்கு கொடுத்துவதும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கண்ணியம் தன்மையை தான். ஆனால் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது குறிப்பாக அங்கு காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தெலங்கானாவில் ஆட்சியை பிடித்ததை சாத்தியமாக்கி கொடுத்தவர் ரேவந்த் ரெட்டி.


காங்கிரஸ் கட்சிக்காக மக்கள் வாக்களிக்கவில்லை, இவருக்கு தான் மக்கள் அதிகமாக இவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். தனி ஒரு நம்பிக்கைதான் காங்கிரஸ் கட்சியை அங்கு ஜெயிக்க வைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை தெரிவிக்கிறது. குறிப்பாக இவர் காங்கிரஸ் கட்சியில் எத்தனை வருடம் இருந்திருக்கிறார் என்பது தொடர்பாக பார்க்கும் பொழுது குறிப்பாக இவர் 2017 ஆம் ஆண்டு தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருக்கிறார். அதற்கு முன்பு வரை எப்படி செயல்பட்டார் என்பது குறித்து பார்ப்போம்.


அவர் மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபடத் துவங்கினார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ரேவந்த் ரெட்டி, அப்போது RSSஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியில் இணைந்து செயல்பட்டார். தெலுங்கானா மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்தார்களா அல்லது காங்கிரஸ் அல்லாத ரேவந்த் ரெட்டி போன்ற ஒரு தலைவருக்கு வாக்களித்தார்களா என்பது உள்ளூர் ஊடகங்களிலும் வட்டார மொழிப் பத்திரிக்கைகளிலும் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் ஒரு முக்கியமான கேள்வி.மாநிலம் தொடர்பான சில விஷயங்களில் பாஜகவுடன் இணைந்து செயல்படக்கூடிய மனிதராக ரேவந்த் பார்க்கப்படுகிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News