கடந்த டிசம்பர் மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் சென்னையில் பெய்த கனமழையால் சென்னை மக்கள் கடும் துயரங்களை பட்டனர். எங்கு திரும்பினாலும் மழை நீர் தேக்கம், வீட்டிற்குள் புகுந்த மழை நீர், மின்சாரம் அத்தியாவசிய பொருட்கள் என எதுவும் கிடைக்காமலும் மீட்பு நடவடிக்கைகளும் இல்லாமலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி மக்கள் நேரடியாகவே தமிழக அரசின் மீது அதிருப்தியில் இருப்பதை தெரிவித்தனர். இதற்கிடையில் கடந்த 2015இல் பெய்த மழையின் அளவைவிட 2023ல் அதிக மழை பெய்ததாக தமிழக அரசு தரப்பில் வெளியான தகவல் பொய் என்று நிரூபிக்கும் வகையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியீட்டு தரவுகள் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
தமிழக அரசு வெள்ள நிவாரண தொகையாக குறைந்தபட்சம் ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும்! மேலும் மாநில அரசை பேரிடர் காலத்தில் மத்திய அரசு அதிகாரிகள் குறை கூறவே மாட்டார்கள், அது மக்களின் எண்ணத்தில் தான் பிரதிபலிக்குமே தவிர மத்திய அரசின் எண்ணத்தில் அல்ல; எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கீடு செய்த பிறகு தான் மத்திய அரசு தனது நிதியை வழங்கும்.
தமிழகத்தில் ஒரு அரசின் அரசியல் முதிர்ச்சியின்மையை முதல் முறையாக பார்க்கிறேன். மத்திய அரசு அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகள் அளித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்வதற்காகவே வந்தனர். மேலும் தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக இதுவரை வழங்கப்பட்ட 900 கோடியில் 75% மத்திய அரசின் பங்கு உள்ளது. அதே நேரத்தில் தமிழக அரசு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கையாண்டவிதமானது மிகவும் தவறானது, அதனால் அரசின் தவறை தமிழக முதல்வர் ஒப்புக்கொள்ள வேண்டும்! என்று தெரிவித்துள்ளார்.
Source : Dinamalar