தேர்தல் நேரத்தில் வேலையை காண்பித்த திமுக எம்.பி.செந்தில்குமார்!!

Update: 2023-12-26 12:59 GMT

கடந்த வருடம் ரூபாய் 49 லட்சம் மதிப்பிலான தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை ஊராட்சி செய்தி மக்கள் தொடர்பு துறையில் கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்ட வளாகத்தில் நவீன நூலகம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியின் தலைவர் தொடங்கி வைத்தார். இதில் தர்மபுரி எம்பி செந்தில்குமாரும் மற்ற பிற நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அந்த நிலையில் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் நூலகம் கட்டும் பணியை தொடங்குவதற்காக பூஜை செய்வதற்கு மஞ்சள் குங்குமம் செங்கற்களில் பூசுப்பட்டிருந்ததை எட்டி உதைத்து இதையெல்லாம் வைத்து பணியை தொடங்கக்கூடாது பூஜை எல்லாம் போடக்கூடாது ஏன் பூஜை மட்டும் செய்கிறீர்கள் கிறிஸ்தவர் எங்கே இஸ்லாமியர் எங்கே இது திராவிட மாடல் ஆட்சி அதனால் அரசு சார்பில் ஏதேனும் பணிகள் நடைபெற்றால் அதற்கு அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் எந்த ஒரு மாதத்தில் அடையாளங்களும் அங்கே இருக்கக் கூடாது என்று கோபத்தில் கொந்தளித்து அப்பகுதி திமுக நிர்வாகியை கடிந்து கொண்டார், 


பின்னர் நிகழ்ச்சி முடிந்தும் இதுகுறித்து கோபத்தில் அங்கிருந்தவர்களை கடுமையாக திட்டி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார் திமுக எம்பி செந்தில்குமார். திமுக எம்பி செந்தில்குமாரின் இந்த செயல் குறித்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. 


இப்படி சாதி இல்லை மதம் இல்லை அனைவரும் சமம் என்று கூறி வந்த திமுக எம்பி செந்தில்குமார் திடீரென தேர்தல் நெருங்கும் வேளையில் தனது நிலைப்பாடில் இருந்து பல்டி அடிக்கும் விதமாக தனது எக்ஸ் பதிவில் தருமபுரி மாவட்டம் உருவாக காரணமாக இருந்த எனது தாத்தா, தருமபுரி முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் மறைந்த டி.என்.வடிவேல் கவுண்டர் அவர்களின் நினைவு நாளான இன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் என பதிவிட்டுள்ளார். 


அதாவது திராவிட மாடல் ஆட்சியில் எந்த மதத்திற்கும் இடமில்லை அனைத்து மக்களும் சமமே! மதம் என்பது கிடையவே கிடையாது, சாதி பாகுபாடு கிடையாது என்பது போன்றெல்லாம் பேசிவிட்டு வந்த எம்பி செந்தில்குமார் தற்பொழுது தனது சமூக வலைதள பக்கத்தில் தனது தாத்தாவை பற்றி குறிப்பிடும் பொழுது "மறைந்த டி என் வடிவேல் கவுண்டர்" என்று ஜாதி பெயரை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். 


இதற்கு பல விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் முன்வைக்கப்படுகிறது அதிலும் குறிப்பாக எம்பி செந்தில்குமார் இதற்கு முன்பாக " மனிதர்கள் மற்றவர்களை மனித நேயத்தை வைத்து மட்டுமே மதிக்க வேண்டுமே தவிர, சாதி அடையாள பெயர் வைத்து அல்ல! பிரதமரை நரேந்திர என்று மட்டுமே அழைப்பேன், அவர் சாதி பெயர் வைத்து அல்ல என்று அவர் மக்களவையில் ஒருமுறை தெரிவித்த கருத்தை குறிப்பிட்டு தற்பொழுது அவர் தனது தாத்தாவை குறித்து குறிப்பிடும் பதிவையும் பதிவிட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் கவுண்டர் வெளியே வருகிறாரா என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.


மேலும் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்கள் தாத்தா பெயரின் பின் உள்ள ஜாதியை தூக்கிக்கொண்டு வருகிறீர்களே! மத்த நேரத்தில் திராவிட மாடல் என்று பினாத்துகிறீர்களே என சமூக வலைதள வாசிகள் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக மக்களவையில் திமுக எம்பி பேசும் பொழுதும் இந்தி பேசுற மாநிலங்களை கோமூத்ரா மாநிலங்கள் என்று தான் நாங்கள் பொதுவாக அழைப்போம் என்று கூறியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Similar News