ஏழைகளை மேலே உயர்த்தும் கட்சி பா.ஜ.க தான்... தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேச்சு..
தமிழகத்தில் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை தொடங்கி இதுவரை சிறப்பாக நடைபெற்று கொண்டு வந்து இருக்கிறார். யாத்திரை இன்னும் சில வாரங்களில் நிறைவு பெற இருக்கிறது. என் மண் என் மக்கள் என்ற யாத்திரை நேற்றைய தினம் கீழ்வேளூர் தொகுதியில் சிறப்பாக நடந்தேறியது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசும் பொழுது, "கடந்த 1968ல் தி.மு.க. ஆட்சியில், கூலி உயர்வு கேட்ட ஒரே குற்றத்திற்காக, பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த 42 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஈவேரா பெரியார் இந்த ஒரு நிகழ்விற்கு கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக, 1969 ஆம் ஆண்டு செம்பனார் கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் பொழுது, தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற வருமானத்தில் எப்படி வாழ வேண்டும்? என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால் தற்பொழுது பாஜக அரசு ஏழைகள் வாழ்வை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் மற்றும் அவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற நிலையை விரும்புகிறது.
ஊழல் கட்சிகளின் மத்தியில் கடந்த 9 ஆண்டுகளில் எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாத ஒரு நல்ல ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் நடத்தி வருகிறது என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் நல்லாட்சியில், இந்தியா உலக அரங்கில் உயர்ந்திருக்கிறது. பொருளாதாரத்தில், உலகில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவின் மதிப்பு உலக நாடுகளின் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் உயர்த்துகிறது. அது மட்டுமில்லாமல் வரும் லோக்சபா தேர்தல்களில் மூன்றாவது முறையாக பிரதமர் ஆட்சியை ஏற்க வேண்டும் என்று உலக நாடுகளும் விரும்புகிறது. மக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து நாட்டை இன்னும் உயர நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இவர்கள் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
Input & Image courtesy: News