ராமர் கோவில் திறப்பு விழா... குழப்பி நிற்கும் இண்டியா கூட்டணி கட்சிகள்...
பாஜக அரசின் மிகப்பெரிய சாதனையாக தற்பொழுது ராமர் கோயில் பிரம்மாண்டமாக திறப்பு விழாவை கொண்டாட இருக்கிறது. இந்த திறப்பு விழாவானது ஜனவரி மாதத்தில் நடைபெற இருக்கிறது. அனைத்து மக்களும் எதிர்பார்த்த மிக முக்கியமான விழாக்களில் ஒன்றாக ராமர் கோவில் திறப்பு விழா அமைதி இருக்கிறது. ஏனெனில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்துக்கள் அனைவரும் எதிர்பார்த்த ராமர் கோயில் அதுவும் அயோத்தியில் அமைந்து இருக்கிறது. ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் விவகாரத்தில், 'இண்டியா' கூட்டணி கட்சிகளுக்குள் பெரும் குழப்பமும், மாறுபட்ட கருத்துகளும் நிலவுகின்றன.
குறிப்பாக இந்த ஒரு திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் தற்பொழுது குழம்பி நிற்கிறது. உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசி அயோத்தியில் அடுத்த மாதம் 22ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா மிகவும் பிரம்மாண்ட முறையில் அரங்கேற இருக்கிறது. இதற்கான விறுவிறுப்பான ஏற்பாடுகளை பாஜக தரப்பு செய்து வருகிறது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். தவிர, மிக மிக முக்கிய பிரபலங்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இந்நிலையில், 'ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க போவதில்லை' என, கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகள் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் தங்கள் கட்சி சார்பில் யாரும் கலந்து கொள்ள மாட்டோம் என்று கருத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் உத்தர பிரதேச மாநிலத்தின் மிக முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியோ மாறுபட்ட தன்னுடைய நிலைப்பாட்டை தற்போது கொண்டு இருக்கிறது. இந்த கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்களின் மனைவி மற்றும் எம்.பி ஆன டிம்பிள் யாதவ் அவர்கள் அழைப்பிதழ் வந்தால் நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News