குஜராத்தில் உலகின் மிகப்பெரிய காப்பர் ஆலை.. அன்று பேசியவர்கள் இன்று வாயடைத்து நிற்கும் தருணம்..

Update: 2024-02-07 11:05 GMT

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்து இருந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, தமிழகத்திற்கு மட்டுமல்ல ஏன்? இந்தியாவிற்கும் மிகப்பெரிய தாமிர உற்பத்தியை கொண்ட ஒரு ஆலையாக விளங்கியது. ஆனால் ஒரு கட்டத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு தமிழகத்தில் இருந்து ஒரு சிலர் கிளப்பிய பிறகு பெரிதும் சர்ச்சை ஏற்பட்டது. அதன் காரணமாக மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு பல்வேறு நபர்களின் சூழ்ற்றியினால் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தூத்துக்குடியில் இருந்து செயல்படாமல் முடங்கியது. இதனால் மக்களின் வாழ்வாதாரங்கள் மட்டுமல்ல அவர்களுடைய வேலை வாய்ப்புகளும் முற்றிலுமாக இழந்ததாக அந்த பகுதியில் இருக்கும் மக்கள் தற்போது வரை கூறிக்கொண்டு வருகிறார்கள்.


இந்தப் போராட்டம் ஒரு பக்கம் இருக்கும் பொழுது மற்றொரு பக்கத்தில் இருப்பவர்கள் தமிழகத்தில் எதற்கு இந்த தாமிர உற்பத்தி ஆலை? அது அவ்வளவு நல்லது என்றால், அதை குஜராத்தில் நிறுவிக் கொள்ளுங்கள் எங்களுக்கு எதுவும் பிரச்சனை கிடையாது என்பது போன்ற கருத்துக்களை அப்போது தெரிவித்தார்கள். அன்று அந்த வார்த்தையை கூறியவர்களுக்கு தற்பொழுது பதிலடி கொடுக்கும் விதத்தில் உலகின் மிகப்பெரிய ஆலை ஒரே இடத்தில் தாமிர உற்பத்தி ஆள குஜராத்தில் கூடிய விரைவில் வர இருக்கிறது.


இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் டாக்டர் அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் அவர்கள் தன்னுடைய ஆதங்கத்தை கூறும்பொழுது, "உலகின் மிகப்பெரிய ஒரே இடத்தில் தாமிர உற்பத்தி ஆலை குஜராத்தின் முந்த்ராவில் அதானி குழுமத்தால் கட்டப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, ​​காப்பர் ஆலை இவ்வளவு பாதுகாப்பாக இருந்தால், குஜராத்தில் இருக்கட்டும் என்று பலர் சொன்னார்கள். சரி, நிகர ஏற்றுமதியாளராக இருந்து, தாமிரத்தின் நிகர இறக்குமதியாளராக இந்தியா மாறியதால், இழப்பு தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் தான்" என்று தன்னுடைய கருத்துக்களை அவர் பதிவு செய்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News