ராஜ்ய சபா தேர்தலில் பெண்களுக்கு வாய்ப்பு அளித்த பாஜக; கட்சியில் அனைவருக்கும் வாய்ப்பளித்து கௌரவிக்க திட்டம்!

Update: 2024-02-15 12:10 GMT

நாட்டின் ராஜ்ய சபாவின் காலியாக உள்ள 56 இடங்களுக்கு வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் தற்பொழுது 28 இடங்களை பாஜக தன்னிடம் கொண்டுள்ளது அதனால் மீண்டும் இந்த 28 இடங்களை தக்க வைப்பது பாஜகவிற்கு நிச்சயமாகியுள்ளது. அதே சமயத்தில் நேற்றைய தினம் இந்த 28 பேரில் பாஜக நான்கு பேருக்கு மட்டுமே மறு வாய்ப்பு அளித்து அறிவிப்புகள் வெளியிட்டிருந்தது. அதில் கட்சித் தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்களான அஸ்வினி வைஷ்ணவி மற்றும் முருகன், அடுத்தது சிறந்த பேச்சாளரான தேசிய செய்தி தொடர்பாளர் சுதன்ஷி திரிவேதி இவர்கள் மட்டுமே தற்போது மீண்டும் ராஜ்ய சபாவில் இடம் பெற்றுள்ளனர். 

மேலும் மீதமுள்ள இடங்களில் கட்சிக்காக உழைத்து பெரிய அளவில் வெளியில் தெரியாதவர்களை கௌரவிக்கும் நடைமுறையை மீண்டும் பாஜக தலைமை மேற்கொண்டுள்ளது. அதோடு பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கவும் பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார் என்பதால் கட்சியின் மகளிர் அணியை சேர்ந்த தரம்சஷிலா குப்தா, மேதா குல்கர்னி, மாயா நரோலியா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு ராஜ்யசபா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

அதுமட்டுமின்றி ஏற்கனவே ராஜ்யசபாவின் எம்பியாக இருந்த மத்திய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், ராஜிவ் சந்திரசேகர், மன்சுக்கு மாண்டவியா, புருஷோத்தம் ரூபலா, நாராயணன் ரானே மற்றும் வி முரளிதரன் ஆகியோருக்கு மறு வாய்ப்பு தரப்படவில்லை! மேலும் பல மூத்த தலைவர்களுக்கும் மறு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை ஆனால் இவர்கள் அனைவரையும் லோக்சபா தேர்தலில் களம் இறக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

Source : Dinamalar 

Similar News