மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றுவது தான் தி.மு.கவின் வேலை.. அண்ணாமலை குற்றச்சாட்டு..
'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பாக தன்னுடைய யாத்திரையை சிறப்பாக தொடங்கி நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற யாத்திரை பயணத்தின் போது தமிழக காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு தராமல் கெடுபுடி செய்ததாகவும் குற்றம் சாட்டு இருக்கிறார். சென்னையில் காவல் துறை கெடுபிடியால் இது மக்கள் சந்திப்பாக நடக்கிறது. நேற்று யாத்திரை பயணம் ஆனது செங்கல்பட்டு சட்டசபைத் தொகுதியின் மறைமலை நகரில், பொதுமக்கள் பேராதரவுடன் வெகுசிறப்பாக மக்கள் சந்திப்பாக நடந்தேறியது.
இந்த ஒரு மக்கள் சந்திப்பிற்கு பிறகு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறும் பொழுது, "சென்னைக்கு ஒரு புதிய பஸ் நிலையம் கட்டுகிறோம் என்று கூறிவிட்டு, செங்கல்பட்டுக்கு அருகில் கிளாம்பாக்கத்தில் கட்டியிருக்கின்றனர். அங்கு அமைச்சர்கள் ஆய்வுக்கு வந்தபோது கூட, ஒரே ஒரு பஸ்தான் நிற்கிறது. இதுதான் தி.மு.க., அரசின் சாதனை செயல்பாடு. திமுக அரசின் செயல்பாடுகளை குறித்து அண்ணமலை அவர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து இருந்தார். மாநில வளர்ச்சி, மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துதல், ஊழல் தடுப்பு, கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகள் வளர்ச்சி, இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் வளர்ச்சி என, அனைத்துக் குறியீடுகளிலும், தி.மு.க., அரசு தோல்வியைத் தழுவியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுமக்களின் பயண நேரத்தை குறைக்க, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் வழித்தடம், பா.ஜ.க ஆட்சியில் அமைக்கப்பட்டது. 598 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்தை, 2022 மே மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார், பிரதமர் மோடி.bஇது மட்டுமல்ல, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பல லட்சம் மக்கள் பலன் அடைந்துள்ளனர். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை முழுதுமே மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி வைத்திருப்பது மட்டும்தானே தவிர, புதிய திட்டங்கள் எதையும் தி.மு.க., அறிவிக்கவில்லை" அண்ணமலை அவர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து இருந்தார்.
Input & Image courtesy: News