அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்திருந்தால் சின்னம் கிடைத்திருக்கும்! தேவையில்லாமல் பழியை போடும் சீமான் - அண்ணாமலை பதில்!
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து போதைப் பொருள் தடுப்பிற்கான சமுதாய இயக்கமாக தமிழக அரசு மாற்ற வேண்டும். மேலும் மற்றொரு பக்கம் இந்த விவகாரத்தை அரசியலாக்கிறோம் ஏனென்றால் அப்பொழுது தான் இந்த விவகாரத்தை மக்களிடமும் கொண்டு செல்ல முடியும் அதோடு சமூக அக்கறையுடனும் தீர்வு காண முயற்சி செய்கிறோம் என்று கூறினார்.
மேலும், நாம் தமிழர் கட்சிக்கு தொடர்ந்து விவசாயிகள் சின்னம் கிடைக்காதது குறித்த கேள்வி அண்ணாமலையிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட பொழுது, யார் ஒருவருக்கு ஒரு சின்னம் வேண்டுமோ அதற்காக அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்! ஆனால் விண்ணப்பிக்காமல் அதற்கு காரணமாக வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டதால் விண்ணப்பிக்க முடியவில்லை என்று சீமான் கூறுகிறார்.
ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால் அதற்கு நிச்சயமாக சின்னம் கிடைத்திருக்கும். எனவே நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை! அதோடு சின்னம் மீண்டும் கிடைக்க வேண்டுமென்றால் விண்ணப்பித்து இருக்க வேண்டும் ஆனால் விண்ணப்பிக்கவில்லை! அவர்கள் விண்ணப்பிக்க கூடாது என்று யார் கூறினார்கள் அவர்களை யார் தடுத்தது, சீமானின் கையைப் பிடித்து சின்னம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம் என்று நானா கூறினேன் அண்ணாமலைக்கும் நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் கிடைக்காததற்கு என்ன சம்பந்தம்! தேவையில்லாமல் என் மீது சீமான் பழியை போடுகிறார் என்று கூறியுள்ளார் மாநில தலைவர் அண்ணாமலை!
Source : Dinamalar