இளம் தலைமுறையினரை அழிக்கும் போதைப்பொருள் பழக்கம்.. கவர்னர் ஆர்.என்.ரவி..
போதை பொருள் புழக்கம் எதிர்கால தலைமுறையினரை அழித்து விடும் என கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருக்கிறார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியான வண்ணம் போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் இதை பயன் படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பது என்னவென்றால், போதை பொருள் போன்ற சலனங்களில் இரு்நது இளைஞர்கள் விலகி இருங்கள், தங்களது வளாகங்களிலோ அருகாமையிலோ போதை பொருள் நுழையாமல் தடுப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
நமது மாநிலத்தில் போதைபொருள் பரவல் மிக மோசமான அளவிற்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் நம்முடைய தேசத்தை வழி நடத்தும் மிகப்பெரிய சக்தியாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அத்தகைய இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமை ஆவது பின்விளைவுகளை ஏற்படுத்தி வளர்ச்சியை குறைக்கும்.
போதை பொருள் புழக்கம் உங்கள் வாழ்வையும் குடும்பத்தையும் சரிபடுத்த முடியாத அளவிற்கு அழித்து விடும். போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். போதை பொருள் புழக்கத்தை தடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
Input & Image courtesy: News