பிரதமர் அடிக்கடி தமிழகம் வருவது குறித்து எதிர்க்கட்சி விமர்சனம்.. அண்ணாமலை கொடுத்த பதில்..

Update: 2024-03-17 14:25 GMT

நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வலுப்பெற வேண்டும் என்று தமிழக பாஜக எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்த வருகிறார் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் மீது அவர் அதிக அன்பை வைத்து இருக்கிறார். இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு முறை தமிழகத்திற்கு வருகை தந்து வருகிறார். இது குறித்து எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சன கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்ணாமலை அவர்கள் பதில் கொடுத்து இருக்கிறார்.


பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவது நல்லது தானே என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அண்ணாமலையிடம், பிரதமரின் தமிழக வருகை குறித்து தி.மு.க.,வினர் விமர்சனம் செய்து வருகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை அளித்த பதில் கூறும் போது, "கடந்தாண்டு 4 முறை பிரதமர் தமிழகம் வந்துள்ளார். அப்போது தேர்தலுக்காக அவர் வந்தாரா.? தேர்தலை மனதில் வைத்து பிரதமர் தமிழகம் வரவில்லை. தமிழகம் மட்டுமின்றி மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பிரதமர் சென்று வந்துள்ளார்.

மோடியின் பயணத்தை விமர்சிக்கும் திமுக.,வினர் முதல்வர் வெளியே வராதது குறித்து பேசுவார்களா?. பிரதமரின் வருகையால் தோல்வி பயத்தில் தி.மு.க., குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறது. மோடியின் வருகையை தேர்தல் தேதியோடு ஒப்பிட்டு பேசி எதிர்க்கட்சிகள் தங்களின் தோல்விக்கான காரணத்தை தெரிவித்துள்ளனர். பிரதமர் அடிக்கடி தமிழகம் வருவது நல்லது தானே" என்று அண்ணாமலை கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News