மீண்டும் நேரடியாக மோதுகிறது திமுக - பாஜக! கவனம் பெரும் தஞ்சை மக்களவை தொகுதி!
2024 லோக்சபா தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பங்கீடுகள் அனைத்தும் பரபரப்பாக முடிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூரில் திமுகவும் பாஜகவும் ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோத உள்ளது.
தற்போது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக திமுக சார்பில் தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி போட்டியிடுகிறார் இவர் தேர்தலுக்கு புதிய முகமாக இருந்தாலும் திமுகவின் குடும்ப பின்னணியை சேர்ந்தவர்!
அதோடு இவருக்கு போட்டியாக பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எம். முருகானந்தம் போட்டியிட உள்ளார். இதற்கு முன்பாக 2014 மக்களவைத் தேர்தலிலும் இதே தொகுதியில் தனது வெற்றி வாய்ப்பை இழந்த இவர் இந்த முறை மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார் மேலும் கடந்த சில மாதங்களாக இதற்கான முன்னெடுப்பு பணிகளை அவர் தீவிரமாக மேற்கொண்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் சார்பில் அக்கட்சி தஞ்சாவூர் மாநில மாவட்ட முன்னாள் அமைச்சர் தலைவர் சிவநேசன் போட்டியிட உள்ளார் மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் என ஹீமாயூன் கபீர் போட்டியிட உள்ளார். இப்படி தஞ்சாவூரில் நான்கு கட்சி தரப்பிலிருந்தும் போட்டி இருப்பதால் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் திமுகவும் பாஜகவும் இதே தொகுதியில் நேரடியாக மோதிய நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக இரண்டு கட்சிகளும் நேரடியாக மோத உள்ளது அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக தஞ்சாவூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய எம். முருகானந்தம் அம்மாவட்ட தேமுதிக செயலாளர் டாக்டர் ராமநாதனை சந்தித்துள்ளார். மேலும் தஞ்சாவூர் மாவட்ட தேமுதிக நாளை மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணையுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Source : The Hindu Tamil thisai