அரசியல் மாற்றத்திற்காகவே நான் போட்டியிடுகிறேன்.. அண்ணாமலையின் காரசார பேச்சு..
அரசியல் கட்சிகளுடன் சண்டை போடுவதற்காக போட்டியிடவில்லை. மாற்றத்திற்காக நான் போட்டியிடுகிறேன் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பேசினார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் பா.ஜ.க சார்பில் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை அவர்கள் கூறும் பொழுது, "கொங்கு மண்டல விவசாயிகள் மற்றும் தொழில்துறையினரின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்படும்.
வட அமெரிக்காவில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி வரியை நீக்கியதன் மூலம் குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருப்பதையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்ட பேசி இருந்தார் l. குஜராத்தில் நிலத்தடி நீர்மட்டம் 13 மீட்டர் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்திருக்கிறது. குறிப்பாக கோடை காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறைவதற்காக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 400 எம்.பிக்களை பெற வேண்டும். 400 எம்.பி.,க்களை பெற்றால் நதிநீர் இணைப்பை செயல்படுத்தலாம். அரசியல் கட்சிகளுடன் சண்டை போடுவதற்காக போட்டியிடவில்லை. மாற்றத்திற்காக நான் போட்டியிடுகிறேன். கட்டாயம் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் குழாய் மூலம் கேஸ் விநியோகம் செய்யப்படும் என்று அண்ணாமலை பேசினார்.
Input & Image courtesy: News