லோக்சபா தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி எங்கு தொடங்க இருக்கிறார் தெரியுமா?

Update: 2024-03-27 13:47 GMT

பிரதமர் மோடி மக்களவை தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை ஐந்து கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், வருகிற 30-ந்தேதி வேட்மனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும். இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக முனைப்புகாட்டு செயல்பட்டு வருகிறது.


வரும் லோக்சபா தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, மோடியை 3வது முறையாக பிரதமர் ஆக்க வேண்டும் என பாஜகவினர் கடும் முயற்சி செய்து வருகின்றனர். முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. வரும் 30ம் தேதி வேட்பு மனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும். இதுவரை ஐந்து கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ., வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி வரும் மார்ச் 31ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து லோக்சபா தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி துவக்குகிறார். அதனைத் தொடர்ந்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.


கடந்த லோக்சபா தேர்தலில் உ.பியில் 64 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 31-ந்தேதி உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து பாராளுமன்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News