அண்ணாமலை மீது பொய் புகார் கொடுத்த நபர் மீது நடவடிக்கை.. கலெக்டர் உத்தரவு..
அண்ணாமலை மீது பொய் புகார் அளித்த நபர் மீது, நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கோவை கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவிட்டுள்ளார். வரும் லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். ஆனால் அவற்றை பொறுக்காத எதிர்க்கட்சியினர் பல்வேறு பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பு வருகிறார்கள். அந்த வகையில் அண்ணாமலை அவர்கள் தனக்கு ஆரத்தி எடுத்த பெண் ஒருவருக்கு பணம் கொடுத்ததாக வீடியோ ஒன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
ஆரத்தி எடுக்கும் ஒரு பெண்ணுக்கு, அண்ணாமலை பணம் கொடுப்பது போன்ற வீடியோவை, ஹரிஸ் என்ற நபர் 'எக்ஸ்' தளம் வாயிலாக, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கிராந்தி குமாரிடம், புகார் ஆக அளித்துள்ளார்.வீடியோவின் உண்மைத்தன்மையை விசாரிக்க, போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கிடையே அண்ணாமலை தனது 'எக்ஸ்' தளத்தில், 'ஒரு காணொளியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், அதற்குப் பதிலாக, கோவை மாவட்ட கலெக்டர், ராமநாதபுரம் மாவட்டத்தில்,2023 ஜூலை 29ம் தேதி 'என் மண்; என் மக்கள்' யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு காணொளிக்கு, தற்போது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்.
"அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது, நமது தமிழக கலாசாரத்தில் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும், இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் அதற்கு முன்பு என் மண் என் மக்கள் என்று யாத்திரை பயணத்தின் போது எடுத்த வீடியோவை தான் தற்போது போலியான புகாராக கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு கூறியிருந்தார். பிறரைப் போல, பணத்தின் மூலம் கிடைக்கும் ஓட்டுகளில், எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது தெளிவு படுத்தியுள்ளோம். இன்று இதுபோன்ற பொய்களைப் பரப்பும் கட்சிகள், உண்மையில் ஓட்டுகளுக்காக பணம் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க, கோவை மாவட்ட கலெக்டர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று, நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்" என்று பதிவிட்டார்.
Input & Image courtesy:News