கணவருக்கும் மனைவிக்கும் ஒரே வயிறா? காய்கறி விற்ற பெண் முதல்வரிடம் கேட்ட கேள்வி!
லோக்சபா தேர்தல் நெருங்கி வர நிலையில் ஒவ்வொரு கட்சிகளின் பிரச்சாரங்கள் வலுவெடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து காலையில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கும் டீக்கடைகளுக்கும் சென்று வருகிறார். அதன்படி நேற்று காலை ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு தன் பிரச்சார வேனில் வந்த பிரதமர் உழவர் சந்தை வாயிலாக நடைபெற்று மேற்கொண்டு அங்கிருக்கும் அனைவரிடமும் பேசினார்.
மேலும் உழவர் சந்தைக்கு வெளியே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பாதையில் காய்கறிகளை வைத்து விற்று கொண்டிருந்த பலரிடமும் அவர்களின் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்த முதல்வரிடம் காய்கறி விற்றுக் கொண்டிருந்த விஜயா என்பவர், வணக்கம் ஐயா மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பிச்சிருந்தேன் இல்லன்னு சொல்லிட்டாங்க இரண்டாவது தடவையும் விண்ணப்பிச்சேன் கிடைக்கல! வாழ்க்கை முழுசும் ரோட்ல உட்கார்ந்து வியாபாரம் பண்றோம் ஐயா அதான் ஏன்னு தெரியலய்யா எங்க வீட்டில கவர்ன்மென்ட் எம்பிளாய் ஆனா அவர் சாப்பிட்டா எனக்கு வயிறு நெறஞ்சிடும்னா எனக்கு மகளிர் தொகை வேண்டாம் ஐயா! என்று கேட்டவுடன் முதல்வர், காரணம் இல்லாமல் மறுக்கப்பட்டு இருக்காது அது குறித்து என்னவென்று விசாரிக்கிறோம் எனக் கூறி அங்கிருந்து விரைந்து சென்றார்.
Source : Dinamalar