அனல் பறக்கும் பிரச்சாரத்திற்காக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. தீவிர ஏற்பாட்டில் பா.ஜ.க..

Update: 2024-04-04 16:15 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு மீண்டும் வருகை தர இருக்கிறார். தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டுவிடும் வேட்பாளர்களை ஆதரித்த தேசிய அளவில் பல்வேறு தலைவர்களும் மற்றும் மத்திய அமைச்சர்களும் வருகை தந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நான்கு நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தீவிர பிரச்சாரத்தில் களமிறங்க இருக்கிறார். தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலை யில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது.


தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் தலைவர்களுமே அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


சமீபத்தில் தந்தி டிவியின் சார்பில் நடைபெற்ற பிரதமர் மோடி உடனான சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து பேட்டியில் பங்கேற்று இருப்பது பாஜக தொண்டர்களுக்கு புது உற்சாகத்தை அளித்திருக்கிறது. தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தமிழக மக்களுக்கு கொண்டு சென்று அவர்களை அவற்றை வாக்குகளாக மாற்றும் பணியில் தற்போது அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News