நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்து மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஆனால் அதே சமயத்தில் முஸ்லிம் மக்களை அவர் ஒதுக்குவதாகவும் எதிர்க்கட்சி தரப்பில் பெரும் குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையிலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மனதில் என்ன இருக்கிறது? என்பது தொடர்பாக அவரே தற்போது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறும் பொழுது, இது பற்றி நான் கேள்வி அடையும் பொழுது நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் இந்துக்கள் என்றோ, முஸ்லிம்கள் என்றோ பெயர் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை.
ஏழை இந்துக்களின் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பிரச்சினை ஏராளமாக இருக்கிறது. அவர்களால் தங்கள் பிள்ளைகளுக்கு முறையாக கல்வி அளிக்க முடிவதில்லை. ஆகவே உங்களால் எத்தனை குழந்தைகளை கவனிக்க முடியுமோ? அத்தனை குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் எனது வேண்டுகோள். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதுதான் எனது தாரக மந்திரம். நான் ஓட்டு வங்கி அரசியல் செய்வது கிடையாது. தவறு என்றால் தவறு என்று சொல்லிவிடுவேன். நான் இந்து முஸ்லிம் பாகுபாடு அரசியல் செய்ய மாட்டேன். இது எனது உறுதிப்பாடு.
இந்து மற்றும் முஸ்லிம் பாகுபாடு அரசியல் செய்தேன் என்றால் நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவன் ஆகிவிடுவேன். ஒரு கிராமத்தில் உதாரணமாக 200 வீடுகள் இருக்கிறது என்றால், அங்கு ஜாதி,மதம் போன்ற வேறுபாடு இன்றி வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும். 200 வீடுகள் இருக்கும் கிராமத்தில் 60 லட்சம் இந்தியர்கள் இருப்பதாக எடுத்துக் கொண்டால், அப்போது அரசு கொடுப்பது 60 லட்சம் பெயருக்கும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். இதுதான் உண்மையான சமூக நீதி. உண்மையான மதச் சார்பின்மை. முஸ்லிம்கள் எனக்கு ஓட்டு போடுவார்களா? என்று பெரும்பான்மையாக கேட்கிறார்கள். ஆனால் இந்த நாட்டு மக்கள் எனக்கு ஓட்டு போடுவார்கள் என்று உறுதியாக நம்புவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Input & Image courtesy: News