சனாதன தர்மத்திற்கு எதிரானவர்களை தண்டிக்கவே இந்த தேர்தல்.. தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா பேச்சு..

Update: 2024-05-16 15:42 GMT

நாடாளுமன்றத் தேர்தல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரான் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரி நகரில் நடைபெற்ற பா.ஜ.க பிரச்சார கூட்டத்தில் தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் உரையாற்றும் பொழுது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் மட்டும்தான் ஏழைகளுக்கு நல்லது செய்ய முடியும்.


சோனியா காந்தி ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக இருந்த சமயத்தில் ராமர் இருக்கிறாரா? என்று ஒரு கேள்வி அவர் எழுப்பியிருந்தார். ஆனால் தற்போது இருக்கும் அரசு அவரை கற்பனை கதை அல்ல என்று கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் அளித்து இருக்கிறது. நடந்து வரும் இந்த நாடாளுமன்ற தேர்தல், ராமர் விரோதிகள் மற்றும் தேச விரோதிகள், இட ஒதுக்கீடு, சனாதன தர்மத்திற்கு எதிரானவர்கள், அரசியல் சாசனத்திற்கு எதிரானவர்கள் ஆகியோரை தண்டிப்பதற்கான ஒரு தேர்தல் களம் ஆகும்.


இந்திய கூட்டணியின் பெரும்பாலான தலைவர்கள் சிறையில் மற்றும் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் நலனும் பிரதமர் மோடியின் ஒரே நோக்கம். ஆனால் இந்திய கூட்டணியின் தலைவர்கள் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க விரும்புகிறார்கள் என்று தேசிய தலைவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News