இண்டியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு தகுதியான தலைவர் யாரும் இல்லை.. அமித்ஷா கருத்து..

Update: 2024-05-23 16:27 GMT

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி தற்பொழுது ஐந்தாம் கட்டத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேற்கு வங்காள மாநிலத்தின் முதன்மை பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தி இருக்கிறார். இந்த கூட்டத்தில் அவர் பேசும் பொழுது, இப்போதே பிரதமர் மோடி 310 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளார். மம்தா பானர்ஜியால் இண்டியா கூட்டணி அழிந்துவிட்டது.

மேற்கு வங்காளத்தில் பாஜக 30 தொகுதிகளில் வெற்றி பெறும். அதன் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உடைந்து விடும். மாநிலத்தில் பாதுகாப்பாக மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்காளத்தில் பாதுகாப்பாக மக்கள் இல்லாமல், ஊடுருவல் காரணமாக மாநிலத்தின் மக்கள் தொகை மாறுகிறது. இது இந்த மாநிலத்தை மட்டும் அல்ல, முழு நாட்டையும் பாதிக்கிறது. மேற்கு வங்காளத்தின் மக்கள் தொகை மாற்ற உதவுவதன் மூலம் மம்தா பானர்ஜி பாவம் செய்கிறார். வாக்கு வங்கி அரசியலுக்காக அவர் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்து வருகிறார் என்று அமித்ஷா குற்றம் சாட்டி இருக்கிறார்.


மேலும் இண்டியா கூட்டணியில் பிரதமர் ஆகக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை. அதன் தலைவர்கள் தங்கள் வம்சம் முன்னேற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களிடம் தேசத்தின் வளர்ச்சிக்கான எந்த ஒரு எண்ணமும் இல்லை என்று அமைச்ச அவர்கள் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். மறுபுறம் நரேந்திர மோடி ஒட்டுமொத்த நாட்டையும் தனது குடும்பமாக கருதுகிறார். அவருக்கு தங்களுடைய வாக்குகளை செலுத்துமாறு அறிவுரை வழங்கி இருக்கிறார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News