சீன படையெடுப்பு குறித்து சர்ச்சை பேச்சில் சிக்கிய மணிசங்கர் ஐயர்! சீனாவை எதிர்க்க மறுக்கும் காங்கிரஸ் தலைவர்கள்!

Update: 2024-05-31 11:40 GMT

கடந்த மே 28ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற எழுத்தாளர் கலோல் பட்டாச்சாரிஜியின் நேருவின் முதல் பணியாளர் தேர்வு என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் 1962 ஆம் ஆண்டு இந்தியா - சீனா இடையே நடந்த போர் குறித்து பேசி உள்ளார். அப்பொழுது 1962 ஆம் ஆண்டு சீனா -இந்தியா மீது படை எடுத்ததாக கூறப்படுகிறது என்று கூறியுள்ளார். இது பெருமளவில் சர்ச்சையானது. ஏனென்றால், 1962 ஆம் ஆண்டு சீனா இந்தியா மீது படை எடுத்ததும் உண்மை. அதில் இந்தியா பெருமளவில் பாதிப்பை சந்தித்ததும், அந்த பாதிப்பிற்காக இந்திய மக்கள் பலர் தங்கள் சொந்த நகை மற்றும் சொத்துக்களை இந்திய ராணுவத்திற்காக கொடுத்தும் உள்ளனர். அதுமட்டுமின்றி அதிக நிதியையும் இந்திய மக்கள் இந்திய ராணுவத்திற்கு வழங்கினார்கள். அப்படி இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சீனாவை எதிர்த்தனர். இப்படிப்பட்ட ஒரு வரலாற்றை மறைக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் அந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதாலே பெருமளவில் அவரது பேச்சு விமர்சனத்தையும் சர்ச்சையையும் கிளப்பியது. 

இதனால் சீன படையெடுப்பு குறித்து பேசும் பொழுது கூறப்படுகிறது என்ற ஒரு வார்த்தையை தவறாக பயன்படுத்தி விட்டதாகவும், அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்பதாகவும் மணிசங்கர் ஐயர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில், இந்தியா மீது சீனா படை எடுத்ததை திருத்த முயற்சிக்கும் செயலானது வெட்கக்கேடு என்று பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஏன் ஒரு முன்னாள் வெளியுரவுத்துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் ஐயரால் நடந்தவற்றை ஏன் உறுதியுடன் கூற முடியவில்லை, சீனாவிற்கு எதிராக ஏன் அவரால் பேச முடியவில்லை, எதற்காக சீனாவிற்கு ஆதரவளிக்கும் வகையில் அவர் பேச வேண்டும் என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது. 

முன்னதாக முன்னாள் பிரதமர் நேரு, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவிற்கான நிரந்தர இடம் வேண்டும் என்று கோரிக்கையை சீனாவிற்காக திரும்ப பெற்றுள்ளார். அதோடு சீனாவிடம் இருந்து ராஜீவ் தொண்டு நிறுவனத்தின் மூலம் ராகுல் நிதி உதவி பெற்றதும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் என ஒட்டுமொத்த காங்கிரசும் சீனாவிற்கு எதிராக ஒரு கேள்வியையும் முன்வைக்கவில்லை!. இதனால் சீனாவுடன் காங்கிரஸ் ரகசிய தொடர்பு வைத்துள்ளதா என்ற கேள்வியும், சந்தேகங்களும் அரசியல் வட்டாரத்தில் சூழ்ந்துள்ளது. 

அது மட்டுமின்றி, 2024 லோக்சபா தேர்தலில் ஆட்சியை பிடித்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க சீனா, காங்கிரஸ் கட்சிக்கு நிதி அளிக்கிறதா? என்ற பேச்சு வெளியுறவு வட்டாரங்கள் மற்றும் அரசியல் அறிஞர்களிடையே பேசப்படுகிறது. 

Tags:    

Similar News