வரலாற்றில் முதல்முறை.. கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க வெற்றி..

Update: 2024-06-05 05:46 GMT

கேரளாவின் பாஜக கால் ஊன்ற மிகவும் கடுமையாக போராடி வந்தது. இந்த ஒரு கடுமையான முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்து இருக்கிறது. குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் கேரளாவில் 20 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 2019 ஆம் ஆண்டு 15 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதில் பாஜக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை. அதே சமயத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தல்களில் முழு இந்தியாவின் பார்வையும் தென் இந்திய தொகுதிகளின் பக்கம் அதிகமாக இருந்தது.


தென்னிந்திய தொகுதிகளில் பாஜக கால் ஊன்ற கடுமையான முயற்சிகளை எடுத்து வந்தது. திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் இருந்தது பா.ஜ.க. திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி 74,004 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் வெற்றி பெற்று இருக்கிறார். இதையடுத்து பா.ஜ.க வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக கேரளாவில் பாஜக கால் ஊன்றி இருப்பது கேரள மக்களுடைய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


பா.ஜ.க. சார்பில் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்ற சுரேஷ் கோபி கட்சித் தொண்டர்களுடன் நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். சுரேஷ் கோபியின் மனைவி ராதிகா வீட்டின் முன்பு குவிந்தவர்களுக்கு பாயசம் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கேரள மாநிலத்தின் முதல் பா.ஜ.க எம்.பி என்ற வகையில் சுரேஷ் கோபி தேசிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News