அஞ்சல் வாக்கில் திமுக வேட்பாளருக்கு இணையான வாக்குகளை பெற்ற அண்ணாமலை! தெற்கில் குவியும் ஆதரவு..!
2024 லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் திமுக சார்பாக கணபதி ராஜ்குமார், பாஜக சார்பில் அண்ணாமலை மற்றும் அதிமுக தரப்பில் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்ட 37 பேர் போட்டியிட்டனர். தேர்தலுக்கு முன்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பெருவாரியான ஆதரவு கோவையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.
மேலும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,50,312 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை வகித்தார். இருப்பினும் அஞ்சல் வாக்குகளில் அண்ணாமலை திமுக வேட்பாளருக்கு ஈடாக வாக்குகளை பெற்றுள்ளார். அதாவது கோவை தொகுதியில் பதிவான மொத்தம் 7,132 அஞ்சல் வாக்குகளில், 2,772 அஞ்சல் வாக்குகள் கணபதி ராஜ்குமாருக்கும், 2524 வாக்குகள் அண்ணாமலைக்கும், 887 வாக்குகள் ராமச்சந்திரனுக்கும், 270 வாக்குகள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதனுக்கும் கிடைத்துள்ளது.
அதே சமயத்தில், கோவையில் போட்டியிட்ட அண்ணாமலைக்கு தொகுதிவாரியாக கிடைத்த வாக்கு சதவீதத்தில் பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், சிங்கநல்லூர் போன்ற தொகுதிகளில் கிடைத்த வாக்கு சதவீதத்தை விட தெற்கு கோயம்புத்தூரில் அதிக வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது.
Source : The Hindu Tamil thisai