குடும்பத் தொடர்பால் பதவி கிடைக்கவில்லை... கனிமொழியின் கருத்திற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!

Update: 2024-06-07 12:50 GMT

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பாஜக பெரும் என எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. மேலும் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை, 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மாதங்களில், குறிப்பாக இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பாஜகவிற்கு அதிக ஆதரவு இருந்தது. இந்த யாத்திரையால் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்தாலும், தமிழக தேர்தலில் அவை வெற்றியாக மாறவில்லை. மேலும் அதிமுகவுடன் இணையாமல் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய முடிவு செய்தது வியூகப் பிழை என விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால் தமிழகத்தில் காங்கிரசை விட பாஜக வெற்றி பெறுவது இது முதல் முறை அல்ல என்பது தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவிகிதம் புலப்படுத்துகிறது. 

2014 தேர்தலில், காங்கிரசின் 4.37 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடும் பொழுது பாஜக 5.56 சதவீத வாக்குகளை பெற்றது. மேலும் அதிமுகவுடனான கூட்டணி இல்லாமல் கன்னியாகுமாரியில் ஒரு மக்களவைத் தொகுதியை வென்றது. இந்த முறை பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியும், தமிழகத்தில் ஒரு எம்பி கூட பெற முடியவில்லை. ஆனால் அங்கு பாஜகவின் வாக்குகள் அதிகரித்துள்ளது. வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, மாநிலங்களவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு தார்மீக பொறுப்பை ஏற்று அண்ணாமலை பதவி விலக வேண்டும் என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தான் கருணாநிதியின் மகன் இல்லை என்று பதிலளித்தார். மேலும் திமுக உறுப்பினர்களைப் போல குடும்பத் தொடர்பு காரணமாக தனக்கு பதவி கிடைக்கவில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை. 

Source : Organiser 

Tags:    

Similar News