நவீன் பட்நாயக் ஒடிசாவில் மிகப்பெரிய பின்னடைவு.. தேர்தல் முடிவுக்கு பின் வி.கே.பாண்டியன் மாயம்..
ஒடிசாவில் நவீன் பட்நாயக் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், அவருடன் எப்போதும் காணப்படும் வி.கே பாண்டியனை செவ்வாய் முதல் காணவில்லை என்ற தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக தேர்தல் முடிவுகள் அறிவித்ததில் இருந்து அவரை காணவில்லை அவர் தலைமறைவாக இருக்கிறார்கள் என்று பல்வேறு தகவல்கள் கிளம்பி இருக்கின்றன. ஒடிசா தேர்தலில், நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து, நவீன் பட்நாயக் முதல்வர் பதவியை இழந்துள்ளார். இதற்கு முழுக்க முழுக்க காரணம் என்று நம்பப்படும் வி.கே. பாண்டியன், தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் காணவில்லை என்பது பல்வேறு தரப்புக்கும் ஆச்சரியத்தையும் ஏராளமான கேள்விகளையும் எழுப்புகிறது.
ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் இருந்த போது, அவர் எங்குச் சென்றாலும் வி.கே. பாண்டியன் நிழல் போல உடன் செல்வது வழக்கம். ஆனால், புதன்கிழமை நவீன் பட்நாயக்குடன் பாண்டியனைக் காணவில்லை. முதல்வர் தன்னுடைய ஆளுநர் மாளிகை சென்று தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்த போதும் சரி, தனது இல்லத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 51 எம்.எல்.ஏக்களுடனான கூட்டத்தின் போதும் சரி அவர் அங்கு இல்லை.மேலும் வி.கே.பாண்டியன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஒடிசாவில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைக்கும் நான்கு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பா.ஜ.க 78 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சிக்கு வந்துள்ளது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே. பாண்டியன் என்று கூறப்பட்ட அவர் தற்போது காணாமல் தலைமறைவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Input & Image courtesy: News