கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம்! வேலுமணி கருத்திற்கு மறுப்பு தெரிவித்த ஜெயக்குமார்...!

Update: 2024-06-08 12:00 GMT

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் முடிவு குறித்து அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஒன்று கடந்த ஆறாம் தேதி நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் தோல்விக்கான காரணங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, பாஜக கூட்டணியை விட்டு விலகியதற்கு அண்ணாமலை தான் முக்கிய காரணம் என்று குற்றம் சாடியுள்ளார். 

அதாவது 2021 சட்டப்பேரவை தேர்தலில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தோம். 2019 தேர்தலை விட தற்போது அதிமுகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். பாஜக கூட்டணியில் அதிமுக இருந்த பொழுது தமிழிசை மற்றும் எல்.முருகன் போன்றவர்கள் தலைவர்களாக இருந்தனர். அப்பொழுது எந்த பிரச்சனையும் ஏற்பட்டது இல்லை. ஆனால் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு பல பிரச்சனைகள் வந்தது. கூட்டணி முடிவிற்கு அண்ணாமலை ஒரு முக்கிய காரணம். 

அதே கூட்டணி நீடித்திருந்தால் 30 முதல் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றிப்போம் என கூறினார். இதனை தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் சந்திப்பில், வேலுமணியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, வேலுமணியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல. அது அவருடைய தனிப்பட்ட அனுமானம். அனுமானத்திற்கு நான் எப்படி பதில் கூற முடியும் என்று பதில் அளித்துள்ளார். இதன் மூலம் கட்சிக்குள் ஏதேனும் உரசல்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்துக் கூறுகின்றனர். 

Tags:    

Similar News