கொண்டாட்டத்தில் தி.மு.க, திண்டாட்டத்தில் தமிழக மக்கள்.. அண்ணாமலை வன்மையாக கண்டிப்பு..

Update: 2024-06-18 13:42 GMT

ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். குறிப்பாக ரேஷன் கடைகளில் தடையின்றி பாமாயில், துவரம் பருப்பு வழங்க வேண்டும். ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் ஏழை எளிய தமிழக மக்கள் திண்டாட்டம் அடைந்துள்ளனர். இன்னும் முழுமையாக ரேஷன் பொருட்களை மக்களுக்கு வழங்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, ரேஷன் பொருட்களை விநியோகிக்காமல் இருப்பது நியாயம் கிடையாது என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.


பிப்ரவரி மாதம் 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு, 6 கோடி லிட்டர் பாமாயில் வாங்க கோரப்பட்ட டெண்டர் என்னவானது? தரமற்ற துவரம் பருப்பை அனுப்பிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பற்றி எல்லாம் யோசனை செய்யாமல், நடவடிக்கை எடுக்காமல் கொண்டாட்டத்தில் திமுக இருக்கிறது. ஆனால் தமிழக மக்களோ ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியிருக்கிறார்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமி அவர்களும் இது குறித்து கண்டன கருத்துக்களை திமுகவிற்கு எதிராக தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "பொது விநியோகத்தில் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து, நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழகத்தில், உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவலநிலைக்கு சீர்கெடச் செய்த இந்த திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News