கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்.. பா.ம.க தலைவர் அன்புமணி கடும் கண்டனம்..
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தின் காரணமாக தற்போது வரை 49 உயிரிழந்து இருக்கிறார்கள். இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி கூறும் போது, "கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. இதற்கு முக்கியக் காரணம் சாராய வியாபாரிகளுக்கு தி.மு.க கொடுத்த ஆதரவுதான்" என்று தெரிவித்துள்ளார். இதேபோல் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "கள்ளக்குறிச்சியில் 49 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும். கடந்த ஆண்டு மே மாதம் மரக்காணம், மதுராந்தகத்தில் 30 பேர் உயிரிழந்தனர். அப்போது அரசு செயல்பட்டு இருக்கவேண்டும். கள்ளகுறிச்சி ஆட்சியர் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என்றார். பிறகு உயிரிழப்பு அதிகரித்தபோது அரசு ஒப்புக்கொண்டது. கள்ளகுறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலுவின் ஆதரவாளரான MLA வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கைது செய்தவர்களை விடுவிக்க சொல்லியுள்ளனர்.
தேர்தல் வெற்றிக்கு திமுகவிற்கு ஆதரவாக பேனர் வைத்துள்ளார். ஆகவே மதுவிலக்குதுறை அமைச்சர் முத்துசாமி, பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் இச்சாவுகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும். கள்ளச் சாரயம், கஞ்சா விற்பனையில் தமிழ்நாடு தள்ளாடுகிறது" என்று நேரடியாக திமுக அரசை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
Input & Image Courtesy: News