கள்ளச்சாராய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கலெக்டரை நிர்பந்தித்தது யார்? விவாத மேடையில் கேள்விகளை முன்வைத்த எஸ்.ஜி.சூர்யா!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்த விவகாரங்கள் கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியின் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இது குறித்த தலைப்புகளில் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்றைய தினம் தனியார் பத்திரிக்கை தொலைக்காட்சியில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் ஏன்? இதற்கு காரணமான அரசியல்வாதிகள், அதிகாரிகள் யார்? இத்துயரம் மீண்டும் நடக்காமல் இருக்க தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்? என்ற தலைப்பில் நடைபெற்று விவாதத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, "பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் பொழுது ஏன் நடந்தது, எப்படி நடந்தது, எப்படி கட்டுப்படுத்த இருக்கலாம், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.
ஆகஸ்ட் 12, 2022 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், போதை ஒழிப்பு போன்ற சம்பவங்களை குறிப்பிட்டு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என பேசி இருந்தார். ஆனால் கடந்த வருடம் 22 மரணங்கள் கள்ளச்சாரத்தால் 13 ஆண்டுகள் கழித்து நடைபெற்றது. அதிலும் கடைசியாக 2009 திமுக ஆட்சியில் தான் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது. அதற்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் கடந்த வருடம் இதுபோன்ற சம்பவம் நடந்த பொழுது, முதல்வர் அவர்கள் இது இனிமேல் தொடராது ஒரு மரணங்கள் கூட நடக்காது. நான் இரும்பு கரம் கொண்டு அடக்குவேன் என்று கூறினார். மேலும் இதற்காக பிரத்தியேகமாக அவசர அழைப்பு எங்களையும் அறிவித்தனர்.
ஆனால் கடந்த வருடத்தில் நடந்த சம்பவமும், இந்த ஜூன் மாதத்தில் நடந்த சம்பவத்தையும் பார்க்கும் பொழுது 13 மாதங்களில் இந்த அரசு நிர்வாகம் எப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. திடீரென இந்த சம்பவம் நடந்ததாக மக்கள் அனைவரும் பார்க்கிறார்கள். ஆனால் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்திற்கு நடவடிக்கை மற்றும் விசாரணை எடுக்க அப்பொழுது அம்மாவட்ட எஸ்.பி ஆக இருந்தவரை மாற்றி மோகன்ராஜ் என்பவரை இதே முதலமைச்சர்தான் நியமித்தார். அந்த அதிகாரி மிக நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். அவரே கள்ளக்குறிச்சியில் நடக்கின்ற கள்ளச்சாராயம் விற்பனை குறித்து விசாரணைகளை தொடங்கியுள்ளார். மேலும் ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய இரண்டு பகுதிகளில் அதிகமாக கள்ளச்சாராயம் காய்ச்சிகிறார்கள் என்பதை தெரிந்த மோகன்ராஜ், இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அப்பகுதியில் இருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், பிரமுகர்கள் அதிக அழுத்தம் கொடுத்து மோகன் ராஜை இதில் நடவடிக்கை எடுக்க விடாமல் செய்துவிட்டனர்.