கள்ளக்குறிச்சியில் பா.ஜ.கவினர் கைதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்.. எஸ்.ஜி. சூர்யா முழக்கம்..

Update: 2024-06-22 14:27 GMT

தமிழகம் முழுவதும் தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் கண்டன கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். இன்று மாநிலம் முழுவதும் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளின் நடைபெற்ற பா.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பாஜக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.


கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், ஐம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பலி வாங்கிய திமுக அரசைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் பாஜக சார்பிலான இந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் பல்வேறு பாஜக தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை கைது செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய தமிழக பா.ஜ.க மாநிலச் செயலாளர் SG. சூர்யா மற்றும் பாஜக பிரமுகர்கள், நிர்வாகிகள் என பலரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

கைது செய்த பிறகு அனைவரையுமே ஒரே இடத்தில் தங்க வைத்து இருக்கிறார்கள். அந்த இடத்திலும் பாஜக சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்து இருக்கிறது. குறிப்பாக முறையாக அனுமதி பெற்றும் போராட்டம் நடத்துவதற்கு தங்களை அனுமதிக்கவில்லை என்று பாஜக குற்றம் சாட்டி இருக்கிறது. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அவர்கள், பா.ஜ.கவினர் கைதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த உள்ளிருப்பு போராட்டத்தின் போது, "மதுவை ஒழிக்க வேண்டும், அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், பாரத் மாதா கி ஜெய்" என்று முழக்கங்களை பாஜகவினர் எழுப்பி இருக்கிறார்கள்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News