கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மௌனம் காக்கும் காங்கிரஸ்... கார்கேவிற்கு கேள்வி எழுப்பி, நட்டா கடிதம்!

Update: 2024-06-24 15:12 GMT

கள்ளக்குறிச்சியில் நடந்த அசம்பாவிதத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் கார்கேவிற்கு மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார். 

அதில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட பெரும் அசம்பாவிதத்திற்கு காங்கிரஸ் கட்சி அமைதி காக்கிறது. இதற்கு காரணம் என்ன? ஏன் காங்கிரஸ் அமைதி காக்கிறது? இச்சம்பவத்தில் ஏராளமான பட்டியல் இனத்தவர்கள் உயிரிழந்துள்ள போதும் காங்கிரஸ் மௌனமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். 

மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சராக உள்ள முத்துசாமியை பதவியில் இருந்து நீக்குவதோடு, முதல்வர் ஸ்டாலினை இந்த விவகாரத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட அழுத்தம் கொடுக்க வேண்டும். ஊழலில் திளைத்துள்ள அதிகாரிகளை பாதுகாப்பதற்கு பதிலாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மௌனம் காப்பதற்கு பதிலாக தைரியமாக குரல் எழுப்ப வேண்டும். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா இதில் குரல் எழுப்பாதது ஏன்? என்று ஜே.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். 

Tags:    

Similar News