கள்ளக்குறிச்சி சோகத்திற்கு மக்கள் மீது பழி போடும் கமல்ஹாசன், சமூக வலைதளத்தில் வலுக்கும் விமர்சனங்கள்!
முழு நேர நடிகராகவும் பகுதி நேர அரசியல்வாதியாகவும் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமலஹாசன் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மீது பழி போடும் வகையில் பேசியுள்ளார். இதற்கு சமூக வலைதளம் முழுவதும் கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்படுகிறது.
அதாவது கடந்த ஜூன் இருபதாம் தேதி, கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில், “ கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் இறந்துள்ளனர், மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்ற செய்தியால் தமிழகம் அதிர்ச்சியடைந்துள்ளது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இது போன்ற அவலம் தமிழகத்தில் மீண்டும் நடக்காமல் இருக்க தமிழக அரசு திருட்டு வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். போதைக்கு எதிரான போரில் நாம் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டிய நேரம் இது" என பதிவிட்டிருந்தார்.
பின்னர், பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்ததால், இதற்கு கமலஹாசன் உட்பட கோலிவுட் பிரபலங்கள் யாரும் கண்டனம் தெரிவிக்காமல் இருந்ததற்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. எனவே, 23 ஜூன் 2024 அன்று, கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை கமல்ஹாசன் பார்வையிட்டார், அதிகப்படியான குடிப்பழக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்து, ஆலோசனை வழங்குவதற்காக மனநல மையங்கள் நிறுவப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதாவது, செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “ பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வரம்பை மீறியதையும், அவர்கள் கவனக்குறைவாக இருந்ததையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் மனநல மையங்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது அரசாங்கத்திற்கு எனது வேண்டுகோள். ஆனால் எந்த வடிவத்திலும் வரம்பை மீறினால் அது சர்க்கரையாக இருந்தாலும் சரி, அல்லது எதுவும் கெட்டதாக இருந்தாலும் சரி என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், ” என்று கூறியுள்ளார்.
இதற்கு, பாஜக தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் கணக்கில், தமிழகத்தில் சட்டவிரோத மதுபானம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்கள் மீது பழியை சுமத்துவதாக கமலஹாசன் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், திமுகவிற்கு சாதகமான இந்த பேச்சுக்கு ராஜசபா எம்பி சீட்டு மட்டும் தான் காரணம் . இது உங்கள் தொழிலின் பரிதாபகரமான வீழ்ச்சி என்று நெடிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன், “அரசாங்கத்தின் இயலாமை மற்றும் திறமையின்மையை கண்டிக்க தவறிய இவர், ராஜ்யசபா சீட்டு நிலுவையில் உள்ளது என்பதை நினைவில் வைத்துள்ளார்! " என்று விமர்சித்துள்ளார்.
Source : The Commune