இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அதளபாதாளத்தில் தள்ளிய காங்கிரஸ் - கருப்பு தினத்தில் தெறிக்கவிட்ட மோடியின் ஆவேச உரை!

நாடாளுமன்றத்தில் பொறுப்பான எதிர்க்கட்சியையே மக்கள் விரும்புகிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2024-06-25 09:42 GMT

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மோடி மூன்றாவது முறையாக  பிரதமராக பதவி ஏற்று உள்ளார். புதிய அரசு பதவி ஏற்றபின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்று கொண்டார்கள். இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

அப்போது தனது அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சிப்போம் என அவர் கூறினார். அதேநேரம் முந்தைய ஆட்சி காலத்தில் அமளியால் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும் அவர் மறைமுகமாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :-

18-வது மக்களவைத் தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய தேர்தல் மிகவும் பிரமாண்டமாகவும் கம்பீரமாகவும் நடத்தப்பட்டது. தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி மகத்தானது மற்றும் பெருமைக்குரியது. கடந்த 60 ஆண்டுகளில் ஒரு அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி ஏற்றது இதுவே முதல் முறையாகும். எனது அரசின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு மக்கள் தங்கள் அங்கீகாரத்தை அளித்திருக்கிறார்கள். இதன் மூலம் எங்கள் பொறுப்பு மூன்று மடங்கு அதிகரித்து இருக்கிறது .

எனவே எங்கள் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் மூன்று மடங்கு அதிகமாக உழைப்போம் என நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறோம் .அதே போல மூன்று மடங்கு பலன்களை வழங்குவோம். புதிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக எம்.பி களின் பதவி ஏற்பு நடக்கிறது .இது பெருமைக்குரிய விஷயம் .அரசை நடத்துவதற்கு பெரும்பான்மை தேவைப்படலாம். ஆனால் நாடு ஒருமித்த கருத்துடன் இயங்குகிறது. நாட்டுக்கு சேவை செய்வதற்கும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் அனைவரையும் அரவணைத்துச் சென்று ஒருமித்த கருத்தை உருவாக்க எனது அரசாங்கம் எப்போதும் பாடுபடும்.

நாடாளுமன்றத்தில் அர்த்தமுள்ள செயல்பாடுகளையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கோஷங்கள் அல்ல. விவாதங்கள் மற்றும் முயற்சிகளே மக்கள் விரும்புகிறார்கள் நாடகம் மற்றும் இடையூறுகளை அவர்கள் விரும்புவதில்லை. நாடாளுமன்றத்தில் ஒரு சிறந்த மற்றும் பொறுப்பான எதிர்கட்சியைத் தான் மக்கள் விரும்புகிறார்கள் .ஆனால் கடந்த காலங்களில் அவற்றின் செயல்பாடுகள் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்திய நினைவு தினம் ஜூன் 25-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளி ஆகும் .அரசியல் சாசனம் நிராகரிக்கப்பட்டு ஒட்டுமொத்த நாடும் சிறையாக மாற்றப்பட்டது .அவசர நிலையை பிரகடனப்படுத்தியதை புதிய தலைமுறையும் வரும் தலைமுறையும் ஒருபோதும் மன்னிக்காது .இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


SOURCE :Newspaper 

Tags:    

Similar News